எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

Elisha: A Tale Of Ridiculous Faith

13 ல் 13 நாள்

2 இராஜாக்கள் 13:10-21 ல் எலிசாவின் வாழ்க்கை முடிவு பெற்றது. அவர் இயற்கைக்கு மீறிய, நம்பமுடியாத அதிசயத்தைக் கடைசி கட்டமாக வைத்திருந்தார். அவர் இறந்து அடக்கம் பண்ணப்பட்டபின்னர், இஸ்ரவேலர் ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், மோவாபியரின் படை திடீர்த்தாக்குதல் செய்ய வந்தது. அந்தப் படை திடீரென்று எதிர்பார்க்காத வேளையில் சூறையாட வந்ததினால் அவர்கள் உடனடியாக அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் எறிந்துவிட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்தான். எலிசாவின் சாவிலும் கூட மற்ற ஜனங்களின் தேவைகளை நிறைவு செய்யவும் அவர்கள் வாழ்க்கையில் அற்புதங்கள் செய்யவும் தமது அன்பின் வாய்க்காலாக கர்த்தர் அவரை உபயோகித்தார். எலிசா தீர்க்கதரிசியின் விசுவாசமும், கீழ்ப்படிதலும், இரக்கமும், தைரியமும் விசித்திரமானவை. கோடரியை மிதக்கச் செய்வதிலும், தன் ஏரை எலியாவின் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து எரித்துப் போடுவதிலும், இறந்துபோன மனிதனை தான் இறந்த பின்னரும் கூட உயிருடன் எழுப்புவதிலும் அவர் விசித்திரமானவர். கேள்விக்கே இடமில்லாமல் எலிசா, வேதாகமத்தின் ஞாபகத்தில் வைக்க வேண்டிய மிக முக்கிய நபருள் ஒருவராவார்.

எலிசாவைப் போல விநோதமாக, தயங்காமல் துணிச்சலான முடிவுகளையும் உலகம் புரியக்கூடாத தீர்மானங்களையும் எடுக்க வேண்டிய காலம் இது. விசித்திரமான விசுவாசத்துடன் வாழ முடிவெடித்து, வாழும் வாழ்வின் இலக்கணமே எலிசா தான். நம் பிடியை போக விட்டு, கர்த்தரிடமே அனைத்தையும் ஒப்படைத்து விட்டால், நாம் நினைத்துப் பார்க்காத ஆச்சரியமான காரியங்களை அவர் நம் வாழ்வில் செய்வார். எல்லாம் உங்கள் கையில் தான் உள்ளது. நீங்களும் எலிசாவைப் போன்ற விசித்திரமான விசுவாசத்தைப் பெற என்ன வழிமுறைகளைக் கையாளப்போகிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Elisha: A Tale Of Ridiculous Faith

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church