எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி
2 இராஜாக்கள் 4:38-44ல் எலிசாவும் இயேசு செய்த அற்புதங்களைப் போலவே தொடர்ந்து பல அற்புதங்கள் செய்து வந்தார். முதல் அற்புதத்தில் தீர்க்கதரிசிகளின் புத்திரருக்குக் காய்ச்சின கூழில் இருந்த விஷத்தை நிவிர்த்தி செய்தார். அடுத்த படியாக வாற்கோதுமையின் இருபது அப்பங்களையும் தாள் கதிர்களையும் விருத்தி செய்து அதை நூறுபேர் சாப்பிட்டதுமன்றி மீதியும் இருந்தது. இது கர்த்தர் மற்ற ஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எலிசாவை உபயோகித்த மற்றொரு அற்புதமாகும். உங்கள் வாழ்விலும் ஏதோ 'கசப்பான கூழ்' போன்ற காரியங்களிலிருந்து கர்த்தர் நிவிர்த்தி செய்திருப்பார். அது வெளிப்படையான உடல்சார்ந்த காரியமோ, அல்லது இருதயமோ மனமோ சார்ந்ததாகவோ இருந்திருக்கலாம். இப்போதும் கூட, உங்களால் நீக்க முடியாத, கர்த்தரின் வல்லமையினால் மட்டுமே நீக்கக்கூடியதான விஷமான காரியம் உங்கள் வாழ்வில் ஏதோ இருக்கலாம். எளிதாக கூழில் செய்ததை உங்கள் வாழ்விலும் செய்து எல்லா விஷத்தையும் நீக்கி உங்களை திரும்பவும் ஆரோக்கியமாகவும் புதிதாகவும் ஆக்க கர்த்தரால் முடியும். உங்கள் வாழ்வில் எந்த விஷத்திலிருந்து கர்த்தர் உங்களை குணமாக்கியிருக்கிறார்? இப்போதும் எந்த விஷத்திலிருந்து கர்த்தர் உங்களை குணமாக்க வேண்டும்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.
More
We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church