எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

Elisha: A Tale Of Ridiculous Faith

13 ல் 9 நாள்

எலிசாவின் வாழ்க்கை அதிசயமான மற்றும் வினோதமான சமயங்கள் நிறைந்தது போலக் காணப்பட்டது. ஒரு விபரீதமான சம்பவம் 2 இராஜாக்கள் 6:1-7ல் உள்ளது. இதில் தீர்க்கதரிசிகளின் ஒரு கூட்டம் குடியிருக்க புது வீடுகள் உண்டுபண்ணும்படியாக மரங்களை வெட்டுவதைப் பார்க்கிறோம். அந்த தீர்க்கதரிசிகளில் ஒருவனுடைய கோடரி தண்ணீரில் விழுந்தது; அது இரவலாக வாங்கப்பட்டிருந்ததால் அவன் மிகவும் வருந்தினான். எலிசா ஒரு கொம்பை வெட்டி, அதை கோடரி தண்ணீரில் விழுந்த இடத்தில் எறிந்தான். உடனே அந்த இரும்பு மிதந்தது. இந்த நிகழ்ச்சியை முதலில் வாசிக்கும் போது இதில் ஒரு நோக்கமும் இல்லையென்று உங்களுக்குத் தோன்றலாம், ஆனால் நீங்கள் இழந்ததைப் பற்றி கர்த்தர் கரிசனையுள்ளவராய் இருக்கிறார். ஒரு காணாமற்போன கோடரி கூட கர்த்தருக்கு சிறிதான காரியமல்ல


நீங்கள் காணாமற்போட்டவை என்ன? ஓர் ஆசீர்வாதமா, ஒரு உறவா, பொருளாதார நிலைமையா, உங்கள் நற்பெயரா வேறு எதுவுமா? நல்ல செய்தி என்னவென்றால், கர்த்தர் நீங்கள் தொலைத்து விட்டவற்றைப் பற்றி மிகவும் கரிசனையுள்ளவரானதால் நீங்கள் காணாமற்போட்டவற்றை மீட்டுத்தர உதவி செய்வார். நீங்கள் காணாமற் போட்டதை எங்கே தொலைத்தீர்கள் என்று ஆரம்பத்தில் துவங்கி தேட, கர்த்தர் உதவுவார். நீங்கள் எந்த இடத்தில் தடம் மாறினீர்களோ அங்கு திரும்பிச் சென்று கர்த்தர் உங்களை மறுபடி சரியான தடத்தில் வைத்துவிட அனுமதியுங்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கும் ஏதோ ஒன்றை நிறுத்திவிட்டு வித்தியாசமான மற்றொன்றை செய்ய வேண்டியதிருக்கும். உங்கள் கோடரி எங்கும் போய்விடவில்லை; நீங்கள் எங்கே விட்டீர்களோ அங்கேயே தான் உள்ளது. கர்த்தர் புவியீர்ப்பு சக்தியையே திருப்பி உங்களுக்கு அதை மீட்டுத் தருவார். கர்த்தர் உங்களுக்கு மீட்டுத்தர வேண்டிய எதை நீங்கள் காணாமற்போட்டிருக்கிறீர்கள்? அதை குறித்து என்ன செய்யப் போகிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Elisha: A Tale Of Ridiculous Faith

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church