எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி
2 இராஜாக்கள் 5 ல் ஒரு அயல் நாட்டு ராஜாவின் படைத்தலைவனாகிய நாகமான் என்ற குஷ்டரோகியைப் பற்றி வாசிக்கிறோம். அவன் ஒரு சிறு அடிமைப்பெண் மூலமாக எலிசா தன்னைக் குணமாக்க முடியுமென்று கேள்விப்பட்டு, ராஜாவுக்கு பல வெகுமானங்களை எடுத்துக் கொண்டு, இஸ்ரவேல் தேசத்துக்குத் தன் பரிவாரங்களுடன் சென்றான். அவன் எலிசாவை சந்தித்தபோது எலிசா தன் கையினால் அந்த இடத்தைத் தடவி, இவ்விதமாய்க் குஷ்டரோகத்தை நீக்கிவிடுவான் என்று நினைத்திருந்தான். அதற்குப் பதிலாக, எலிசா அவனை யோர்தானில் ஏழுதரம் ஸ்நானம்பண்ணச் சொன்னது நாகமானுக்கு கேலியாகத் தெரிந்தது. முதலில் நாகமான் அதைச் செய்ய மறுத்தும் பின்னர் அவன் ஊழியக்காரர் சொல்லைக் கேட்டு இறங்கி, அப்படியே செய்தான். தேவனுடைய மனுஷன் வார்த்தையின்படியே செய்த போது நாகமான் சுத்தமானான். அதன் பின் அவன் செய்த செயல் மிகவும் இயற்கையானது தான்.
உங்கள் வாழ்விலும் கர்த்தர் ஏதோ ஒன்றை செய்யச் சொல்லும்போது அது உங்களுக்கு விகற்பமானதாகவும், வினோதமானதாகவும் அப்போது தெரிந்திருக்கும். ஒருவேளை நாகமான் எதிர்பார்த்தது போல கர்த்தர் உங்களுக்கு ஒரு காரியம் செய்யக் கேட்டிருப்பீர்கள், ஆனால் அவரது முதல் பதில் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்றாக இருந்திருக்கும், நீங்கள் கர்த்தரின் வழிமுறைப்படி செய்யுமளவுக்கு உங்களில் பணிவு இருந்திருக்காது. நாம் கர்த்தரிடம் ஒன்றைக் கேட்கும்போது அவர் இப்படித்தான் செய்யவேண்டுமென்றும் இப்போது தான் செய்யவேண்டுமென்றும் எதிர் பார்க்கக்கூடாது. நாம் கர்த்தரிலும் பெரியவர்களல்ல. அவர் சரியான வேளையில் சரியானபடி செய்வார் என்று அவர் மேல் நமக்கு விசுவாசம் வேண்டும். எதுவுமே நம் பொறுப்பில் இல்லை. ஏசாயா55:8 ல் கூறியுள்ளபடி கர்த்தருடைய வழிகள் நம் வழிகள் அல்ல; கர்த்தரே பொறுப்பில் இருக்கிறார். கர்த்தருடைய வழிகள் உங்கள் வழிகள் அல்லவென்று நீங்கள் உங்களைத் தாழ்த்தி உணர்வதற்கு என்ன வழிமுறைகளைக் கடைப்பிடிக்கலாம்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.
More
We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church