எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

Elisha: A Tale Of Ridiculous Faith

13 ல் 11 நாள்

2 இராஜாக்கள் 6:24ல் துவங்கி 7ம் அதிகாரம் முடிவு வரையில் கர்த்தர் எலிசாவை எவ்வாறாக ஜனங்களின் தேவைகளை நிறைவேற்ற பயன்படுத்தினார் என்ற ஒரே பொதுவான மையக்கருத்தாக உள்ளது. இந்த பகுதியில் சீரிய ராஜா முற்றிக்கை போட்டதால் இஸ்ரவேலில் கொடிய பஞ்சமுண்டாயிற்று. கர்த்தர் மிக அதிகமான உணவு வழங்கப் போவதால் உணவின் விலை மிகவும் சொற்பமாகும் என்று எலிசா தீர்க்கதரிசனமாக கூறினான். அதன் விளைவாக நடப்பதும் எலிசாவின் வாழ்வில் நடந்த ஒரு வினோதமான நிகழ்ச்சியே. சீரிய இராணுவம் தங்கள் கூடாரங்களையும் தங்கள் பலசரக்குகளையும் அவைகள் இருந்த பிரகாரமாக விட்டு, கேலிக்கிடமாகும்படி ஓடிப்போனார்கள். மீண்டுமாக இஸ்ரவேலரின் தேவைகளை கர்த்தர் சந்திக்கிறார். கர்த்தர் தம் ஜனத்துக்கு ஆதரவானவர், உங்களுக்கும் அவரே ஆதரவு.

நீங்கள் தேவையிலிருந்த காலங்களை நினைத்துப் பாருங்கள். இஸ்ரவேலருக்கு செய்தது போல உங்கள் தேவைகளையும் சந்திக்க கர்த்தர் உதவின விதங்களை நினைத்துப் பாருங்கள். தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார் என்று பிலிப்பியர் 4:19ல் கூறப்பட்டுள்ளது. அந்த வாக்குத்தத்தம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்ரவேலருக்கு உண்மையாயிருந்தது போலவே இன்றும் உங்கள் வாழ்வில் உண்மையாகவே உள்ளது. கர்த்தர் உங்களை கைவிட மாட்டார்; உங்களது தேவைகள் சிறியதாகவோ பெரியதாகவோ இருப்பினும் அவர் அவற்றை நிறைவு செய்ய உதவுவார். எந்த வழிமுறைகளில் கர்த்தர் உங்கள் வாழ்வின் தேவைகளை தொடர்ந்து நிறைவேற்றுவதை கண்டிருக்கிறீர்கள்?
நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Elisha: A Tale Of Ridiculous Faith

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church