எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

Elisha: A Tale Of Ridiculous Faith

13 ல் 10 நாள்

2 இராஜாக்கள் 6:8-23ல் சீரியாவின் ராஜா எலிசாவைப் பிடிக்க முயற்சித்தான்; ஏனென்றால், அவன் அநேகந்தரம் யுத்தம் பண்ணியும் இஸ்ரவேலின் வெற்றிக்கு எலிசா தான் காரணமாக இருந்தான். ஒவ்வொருமுறை இஸ்ரவேலுக்கு விரோதமாக சீரியர் பாளயமிறங்கும் போதும் எலிசா இயற்கைமுறைக்குளடங்காத விதத்தில் இஸ்ரவேலின் ராஜாவை எச்சரித்து சீரிய ராஜாவின் திட்டங்களை முறியடித்தான். எலிசாவின் வேலைக்காரன் எலிசாவை சீரிய ராஜா பிடிக்க முயல்வதைக் கேள்விப்பட்டபோது மிகவும் திகிலடைந்தான். ஆனால் அவன் கண்களைக் கர்த்தர் திறக்கும்படி எலிசா விண்ணப்பம் பண்ணினவுடனே அந்த வேலைக்காரன் கர்த்தரின் சேனைகள் தம் பக்கம் இருக்கக் கண்டு பயம் நீங்கப் பெற்றான். கர்த்தரின் வல்லமை எவ்வாறாக தங்கள் அருகில் இருக்கிறதென்பதை உணர்ந்த எலிசாவின் வேலைக்காரனுக்கு முன்னேறிச் செல்ல தைரியம் வந்தது.

பல சமயங்களில் நாமும் நம் வாழ்க்கையில் எலிசாவின் வேலைக்காரனைப் போலிருக்கிறோம்; நாம் பார்க்க வேண்டியவற்றைப் பார்க்காதபடிக்கு நம் கண்கள் குருடாக்கப்பட்டுள்ளன, நம்மால் பார்க்க முடியவில்லையே என்ற கலக்கமும் நமக்கு ஏற்படுகிறது . ஒருவேளை, நீங்கள் போதைப்பொருட்களுக்கு அடிமைப்பட்டிருப்பதையோ ஒரு உறவு முறிந்து கொண்டிருக்கிறதையோ உணராதபடி குருடாக இருக்கலாம். ஒருவேளை, நீங்கள் கர்த்தருடன் முழு மனதான விசுவாச ஜீவியம் வாழவில்லை, தேவைப்பட்டபோது மட்டும் அல்லது தேவாலயத்தில் மட்டும் அவரைப் பின்பற்றுகிறீர்கள் என்ற உண்மையையோ உணராதபடி குருடாக இருக்கலாம். ஒருவேளை கர்த்தர் உங்களை அழைத்தவாறல்லாது, உங்கள் சுயதிருப்தியிலேயே நீங்கள் அகமகிழ்ந்து கொண்டிருக்கக் கூடும். எப்படிப்பட்ட காரியத்துக்கு நீங்கள் குருடாயிருந்தாலும் கர்த்தரால் உங்கள் கண்களைத் திறந்து உண்மையைப் பார்க்க உதவ முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கர்த்தரிடம் மன்றாடிக்கேட்டு, அவர் உங்கள் கண்களைத் திறக்க இடமளிக்க வேண்டியதே ஆகும். நீங்கள் பார்க்க வேண்டிய எதை பார்க்கக் கூடாதபடி உங்கள் கண்கள் குருடாக்கப்பட்டிருக்கிறதென்று நீங்கள் நினைக்கிறீர்கள்? உங்கள் கண்கள் திறக்கப்பட நீங்கள் என்ன வழிமுறைகளைக் கையாளப்போகிறீர்கள்?

வேதவசனங்கள்

நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

Elisha: A Tale Of Ridiculous Faith

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church