எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி
எலிசாவின் வரலாறு 1 இராஜாக்கள் 19:14-21ல் கர்த்தர் எலிசாவை உன் ஸ்தானத்திலே தீர்க்கதரிசியாக அபிஷேகம்பண்ணு என்று எலியாவிடம் கூறியபோது துவங்குகிறது. இந்த வேத பகுதியில் நாம் வாசிக்கிறபடி, எலியா வயலில் ஏர்பூட்டி உழுது கொண்டிருந்த எலிசாவைக் கண்டவுடனே தன்னைப் பின்பற்றும்படி எலியா அவன்மேல் தன் சால்வையைப் போட்டான். எலிசா கீழ்ப்படிந்து உடனே போய், ஓர் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளால் அவைகளின் இறைச்சியைச் சமைத்து ஜனங்களுக்குக் கொடுத்தான். எலிசா எலியாவிடம் வினோதமான கடமையுணர்ச்சியோடு செயல் பட்டான். அவன் கீழ்ப்படிதலுக்கு காலம் தாழ்த்தவில்லை. அவன் யோசித்து முடிவெடுக்க போய்விடவில்லை. அவன் ஆதரவாகவும் , எதிராகவும் உள்ள காரணங்களை எழுதிப்பட்டியலிடவில்லை. அவன் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவில்லை. உடனே எலியாவின் மூலம் வந்த கர்த்தரின் அழைப்புக்கு ஆம் என்று பதிலளித்தான்.
கர்த்தரைப் பின்பற்றுவதன் விலை மதிப்பீடு மிகவும் அதிகமானது, ஆனால் அவரைப் பின்பற்றாததன் விலை மதிப்பீடு அதை விட பெரியது என்பதை எலிசாவின் வினோதமான கடமையுணர்ச்சி எடுத்துக் காட்டுகிறது. மேலும், எலிசாவின் கடமையுணர்ச்சி முழுமையானது. அவன் தன் ஏர்மாடுகளைப் பிடித்து அடித்து, ஏரின் மரமுட்டுகளை எரித்து தன் பரம்பரை சொத்துரிமைகளை விட்டுவிட்டான். அவனுக்கு அறிமுகமானதும் அன்பானதுமான எல்லாவற்றையும் பின்தள்ளினான். நம் இலக்கை அடைய நம் பாதுகாவலிலிருந்து நாம் வெளிநடக்க வேண்டுமென்று எலிசா காண்பிக்கிறார். கர்த்தருக்கான உங்கள் கடமையுணர்ச்சி எலிசாவை போல உடனடியானதும் முழுமையானதுமாக இருக்கிறதா? இலக்கை நோக்கித் தொடர நீங்கள் எந்த பாதுகாவலிலிருந்து வெளிநடப்பு செய்ய வேண்டும்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.
More
We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church