எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி
2 இராஜாக்கள் 3 ம் அதிகாரத்தில் ஒரு அற்புதமான நிகழ்ச்சியைப் பார்க்கிறோம்: இஸ்ரவேல், யூதா, ஏதோம் என்ற மூன்று தேசத்து இராஜாக்களும் சேர்ந்து ஒரு சுலபமாக ஜெயிக்கக்கூடிய யுத்தத்திற்கு செல்கிறார்கள், ஆனால் அவர்கள் நினைத்தபடி நடக்கவில்லை. பின்னர் அந்த இராஜாக்கள் யுத்தத்தில் உதவும்படி எலிசாவை நாடினார்கள். ஆனால் எலிசா அவர்கள் எதிர்பார்த்த பதிலை அளிக்கவில்லை. எலிசா அவர்களை நோக்கி ‘இந்தப் பள்ளத்தாக்கிலே எங்கும் வாய்க்கால்களை வெட்டுங்கள். நீங்களும் உங்கள் ஆடு மாடுகளும் உங்கள் மிருகஜீவன்களும் குடிக்கும்படிக்கு, இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரால் நிரப்பப்படும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.’ என்று சொன்னான். ‘இப்படி செய்தால் மோவாபியரை உங்கள் கையிலே ஒப்புக்கொடுப்பார்’ என்றான். அந்த இராஜாக்களுக்கு இது ஒரு கேலிக்குரியதாகத் தெரிந்திருக்கும், ஆனால் அவர்கள் கர்த்தரின் வார்த்தையை நம்பி அதன்படியே செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சி விசுவாசத்தை மட்டுமே பொருத்தது. கர்த்தர் தான் தண்ணீரை அனுப்பமுடியும், ஆனால் உங்களை வாய்க்கால்கள் வெட்டும்படி எதிர்பார்க்கிறார். உங்கள் வாழ்க்கையிலும் தண்ணீர் வேண்டுமானால், நீங்களும் வாய்க்கால்களை வெட்டுங்கள். உண்மையான விசுவாசம் கிரியை செய்யும், பெரிதானவற்றை நம்பும், ஆனால் நீங்கள் சிறிய முறையில் துவங்க விருப்பமுள்ளவர்களாக இருக்க வேண்டும். உங்கள் தரிசனத்தின் அளவு கர்த்தருக்குப் பெரிதல்ல. பலர் பெரிய அளவில் நினைத்துக்கூடப் பார்க்கிறதில்லை, சிறிய அளவில் துவங்குவதும் இல்லை. எப்படி வாய்க்கால் தோண்டுவீர்கள்? உங்கள் மண்வெட்டியை எடுத்து தரையை ஒவ்வொரு தடவையாக வெட்டுங்கள். சிறிய அளவில் நீங்கள் துவங்காவிட்டால் பெரிய காரியங்களைக் கர்த்தர் செய்யும்படி எதிர்பார்க்க முடியாது. பெரிதானவைகளை நம்புங்கள், சிறியதாக துவங்குங்கள். சிறிய பள்ளங்கள் தோண்டி உங்கள் விசுவாசத்தை செயல்படுத்துங்கள். உங்களது எந்த பெரிய தரிசனத்தை செயல்படுத்த கர்த்தரின் உதவி தேவையென்று நினைக்கிறீர்கள்?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.
More
We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church