எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறுமாதிரி

Elisha: A Tale Of Ridiculous Faith

13 ல் 6 நாள்

எலிசாவின் வாழ்க்கை முழுவதும் அவர் செய்த பல அற்புதங்கள் இயேசு செய்த அற்புதங்களை ஒத்தே இருக்கின்றன. 2 இராஜாக்கள் 4:8-37ல் எலிசா சூனேமியாளின் குமாரனை சுகப்படுத்திய அற்புதம் அப்படிப்பட்ட அற்புதங்களில் ஒன்று. முதன்முறையாக எலிசா அந்த ஸ்திரீயை எதிர்கொண்டபோது சகல சலக்கரணையோடும் அவள் அவர்களை விசாரித்த விதத்தைக் குறித்து மிகவும் கவரப்பட்டு, அவளுக்கு மிக அதிகத்தேவையான காரியமான ஒரு பிள்ளையை கைம்மாறாக அளிக்க நினைத்தார். கர்த்தர் அவளுக்கு ஒரு குமாரனைக் கொடுத்தார், ஆனால் பல வருடங்கள் கழித்து அவன் இறந்து விடவே, அவனைத் திரும்பவும் உயிரோடு எழுப்ப அவள் எலிசாவின் உதவியை நாடினாள். இதில் இரண்டு ஆச்சரியமான காரியங்கள் உள்ளன: முதலாவது, எலிசா தன் வாய் பிள்ளையின் வாயின்மேலும், தன் கண்கள் அவன் கண்களின்மேலும், தன் உள்ளங்கைகள் அவன் உள்ளங்கைகளின்மேலும் படும்படியாக அவன்மேல் குப்புறப்படுத்து அவனை உயிர்ப்பிக்க முயன்றது. இரண்டாவதாக, எலிசா அவனை உயிர்ப்பிக்க முயன்ற முயற்சிகள் முதலில் தோல்வியடைந்தது.

நீங்களும் எத்தனை முறைகள் எலிசாவின் நிலைமையில் இருந்திருக்கிறீர்கள்? நீங்கள் கர்த்தரிடம் அவரால் செய்ய முடிந்த ஏதோ ஒன்றை செய்யச் சொல்லிக் கேட்டும் அது முதலில் நீங்கள் கேட்டபோது நடக்கவில்லை. அந்தக் காரியம் சில நாட்களோ, மாதங்களோ, வருடங்களோ ஆகலாம். ஆனால் நீங்கள் முதன்முறையாக கேட்ட போது நடைபெறவில்லையென்றால் கைவிட்டுவிடாதீர்கள். ஜெபித்துக் கொண்டே இருங்கள். கர்த்தரை தேடிக் கொண்டே இருங்கள். அவர் உங்களுக்கு மிக சிறந்த நேரத்திலும் மிகச் சிறந்த வகையிலும் உங்கள் ஜெபத்திற்கு பதிலளிப்பார். மனதை தளரவிடாமல் ஜெபித்துக் கொண்டே இருங்கள். நீங்கள் கேட்டுக் கொண்டே இருந்தும் அவர் இன்னும் பதிலளிக்காத ஒரு காரியம் என்ன? ஜெபத்தின் மூலம் கேட்டுக் கொண்டே இருக்கும் இந்த ஒரு காரியத்துக்காக ஜெபிப்பதை நீங்கள் கைவிடாமலிருப்பதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

வேதவசனங்கள்

நாள் 5நாள் 7

இந்த திட்டத்தைப் பற்றி

Elisha: A Tale Of Ridiculous Faith

எலிசா வேதாகமத்தில் காணும் பல மனிதர்களுள் வசீகரமானவர். இந்த தீர்க்கதரிசியின் விசுவாசமும் அற்புதங்களும் விசித்திரமானவை. இந்த 13 நாள் திட்டத்தில் எலிசாவின் வாழ்க்கையை வாசித்து பின்னர் அப்படியாக நீங்களும் விசித்திர விசுவாசத்தைக் கொண்டு வாழ தீர்மானித்தால் வாழ்க்கை எவ்வாறாக அமையுமென்று கற்றுக் கொள்வீர்கள்.

More

We would like to thank Pastor Craig Groeschel and Life.Church for providing this plan. For more information, please visit: www.Life.Church