பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 1 நாள்

இது கிறிஸ்துமஸ் காலம்!

வேதாகமத்தில் சொல்லப்பட்டிருக்கும் கிறிஸ்துமஸ் நிகழ்வின் உள்ளாக பெத்லேகேமில் ஒரு பயணம் செய்வோம். இயேசுவின் பிறப்பின் சரித்திரம் பெத்லேகேமிலோ, அல்லது நாசரேத்திலோ துவங்கவில்லை ... ஆனால் தேவனுக்காக நல்ல ஜீவியத்தை ஜீவிப்பதின் பூர்த்தியை உணர்ந்த ஒரு வயோதிப கணவன் மனைவியில் துவங்கியது.

வேதாகமம் எலிசபெத் சக்கரியா-வை மிக அழகான முறையில் வர்ணிக்கிறது: "அவர்கள் இருவரும் கர்த்தரிட்ட சகல கற்பனைகளின்படியேயும் நியமங்களின்படியேயும் குற்றமற்றவர்களாய் நடந்து, தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள்." - லூக்கா 1:6

எலிசபெத் சக்கரியா, இருவரும் அநேக நாளாக திருமணம் ஆகியும் குழந்தை இல்லாமல் இருந்தனர். இந்த ஆசாரியனுக்கும் அவன் மனைவிக்கும் மன வேதனை மிகவும் மோசமாக இருந்திருக்கும், ஆனால் வேதாகமம் அவர்கள் தேவனுக்கு முன்பாக நீதியுள்ளவர்களாயிருந்தார்கள் என்று வர்ணிக்கிறது.

நீ எவ்வாறு ஏமாற்றத்துக்கு பிரதிகிரியை செய்கிறாய்? அதை அழுகைக்கும் குறை சொல்வதற்கும் ஒரு சாக்காக பயன்படுத்துகிறாயா? எலிசபெத் மற்றும் சகரியா கரத்தில் பிள்ளையாற்று நம்பிக்கையில்லாமல் இருந்தபோதும், அந்த கடினமான வருடங்கள் மத்தியிலும் தேவனை முழு இருதயத்தோடு பின்பற்றினார்கள்.

வேதாகமம் யாக்கோபு 5:16 இல் "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது!" என்று கூறுகிறது. நீ ஒரு நீதியுள்ள வாழ்க்கையை வாழ தொடரும்போது ... தொடர்ந்து ஜெபிக்கும்போது ... உன் ஜெபம் உன் தேவையை முழுமையாக்கும்.

வேதாகமம் ஆபகூக் 2:4 இல் "தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான்." என்றும் கூறுகிறது. எலிசபெத்தும் சகாரியாவும் காட்சியினால் அல்ல விசுவாசத்தால் தொடர்ந்து முன்னேறினார்கள்.

எலிசபெத் என்னும் பெயருக்கு "தேவனே என் உறுதிமொழி" என்று அர்த்தம். மற்றவர்கள் தேவனோடு செய்த வாக்குறுதிகளை கைவிட்டிருந்தாலும் எலிசபெத் தேவனுடைய வாக்குகளை தொடர்ந்து நம்பினால். அவள் நண்பர்கள் குழந்தைகளை தாலாட்டி பேரப்பிள்ளைகளை பெற்றிருந்தாலும் எலிசபெத் தேவன் தன் ஜெபங்களை கேட்கிறார் என்று தொடர்ந்து நம்பினால்.

இந்த கிருஸ்துமஸ் நீ படிக்கும் முதல் பாடம் தேவனோடு பொறுமையாக இயற்க வேண்டும் என்பதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். உன் சூழ்நிலைகள் சவால் நிறைந்ததாக இருக்கும்போதும் தேவனை விசுவாசி. ஏமாற்றம் நிறைந்த நாட்களிலும் தொடர்ந்து நீதியுள்ள வாழ்க்கையை ஜீவி. ஊக்கமாக ஜெபித்து தேவன் உன் ஜெபங்களை கேட்கிறார் என்று தொடர்ந்து நம்பு. உன் சொந்த விருப்பம் நடக்காமல் போகும்போது ஒரு முற்போக்கான சுபாவத்தை பிடித்துக்கொள்.

விசுவாசிகள் காட்சியினால் அல்ல விசுவாசத்தால் நடப்பார்கள் என்று எலிசபெத்தின் வாழ்க்கை மூலம் ஏற்றுக்கொள்.
நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்