பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
சகரியா மக்களின் சார்பாக தேவனுக்கு தூபவர்க்கம் கொண்டு ஆராதிக்க தேவாலயத்தின் பரிசுத்த ஸ்தலத்திற்கு செல்ல ஆசாரியனாக தெரிந்தெடுக்கப்பட்டான். ஆனால், சகரியா தூபவர்க்க பலிபீடம் அருகில் நின்றபோது, ஒரு ஆச்சரியமூட்டும் விருந்தாளியை கண்டான்! சகரியா மற்றும் எலிசபெத்துக்கு பரலோகத்திலிருந்து ஒரு சுவாரசியமான செய்தியை கொண்டுவர காபிரியேல் தூதன் அனுப்பப்பட்டான்.
“சகரியாவே, பயப்படாதே, உன் வேண்டுதல் கேட்கப்பட்டது," என்ற வார்த்தைகளை கூறி தேவதூதன் அந்த சரித்திரத்தை மாற்றும் தருணத்தில் பேசினான். 400 ஆண்டுகளாக தேவன் அமைதலாக இருந்து, இந்த சனத்தில், அநேக ஆண்டுகளாக திருமண நாளிலிருந்து சகாரியாவும் அவன் மனைவியும் ஏறெடுத்த ஜெபத்திற்கு உரத்த சத்தத்தோடு பதிலை தந்தார்.
காத்திருந்து ஜெபித்து நம்பியிருந்த இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு, எலிசபெத் சகரியாவின் திருமண வாழ்வில் பரலோகத்தின் தலையீடு நடந்தது. அது உண்மையாக இருக்குமா? திருமணமாகி அநேக ஆண்டுகளுக்கு பிறகு ஒரு குமாரனை பெறுவது சாத்தியமா? எலிசபெத்தின் வயோதிப நிலை 9 மாத கர்ப்பத்தை தாங்கி பிறப்பின் வலியை தாக்குப்பிடிக்க கூடுமா? தேவனே, நீர் உண்மையில் அவ்வளவு நல்லவரா?!
ஆம் அது உண்மைதான்: தேவன் நிச்சயம் நம் ஜெபங்களை கேட்கிறார். அவர் உன்னுடைய வேண்டுதல்களை கேட்கிறார், தைரியமாக வெட்கமில்லாமல் ஒரு விசுவாசி அவரிடம் வருவதை அவர் நேசிக்கிறார். வேதாகமம் எல்லா தலைமுறை கிறிஸ்துவர்களும் கேட்க வேண்டும், கேட்டு கொண்டே இருக்கவேண்டும், தேட வேண்டும் தேடிக்கொண்டே இருக்கவேண்டும், தட்ட வேண்டும் தட்டி கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்கிறது! (மத்தேயு 7:7)
நீ எதற்காக ஜெபித்து கொண்டிருக்கிறாய்? ஒருவேளை ரட்சிக்க படாத கணவனோ மனைவியோ ... ஒரு முரட்டாட்டம் நிறைந்த பிள்ளை ... பண தேவையிலிருந்து விடுதலை ... இல்லாவிட்டால் ஆரோக்கியத்திற்காக உன்னுடைய ஜெபங்கள் அநேக ஆண்டுகளாக நிறைந்திருக்கலாம். நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கூடிய ஜெபத்தை நீ எலிசபெத் சகாரியாவை போல ஏறெடுக்க வேண்டும்!
நம்முடைய அழுக்கான தூசி படிந்த ஜீவியங்களுக்கு உள்ளாக பரலோகம் வர வேண்டிய நேரமாக கிருஸ்துமஸ் நாட்கள் இருக்கிறது. அற்புதங்கள் நடக்கும், ஜெபங்கள் பதிலளிக்க படும், பரலோகம் ஒரு பதில் தூரத்தில் தான் உள்ளது என்று நினைவூட்டும் வேளையாக கிருஸ்துமஸ் இருக்கிறது.
நீ கூடாதவைகளை கேட்கும்போது தேவனை காணப்படுத்துகிறாய்! கூடாதவைகளை தான் கிறுஸ்துமஸின் தேவன் சிறப்பாக செய்ய கூடியவராக இருக்கிறார்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்