பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 4 நாள்

பிரிட்டிஷ் நாட்டு போர்சேவகர்கள் 1914 ஆண்டு கிறிஸ்துமஸின் முந்தின இரவை முதல் உலக மகா யுத்தத்தின்போது பிரான்சு நாட்டில் போரில் செலவழித்தார்கள். நான்கு மாதம் போருக்கு பிறகு, அந்த யுத்தத்தில் பத்து லட்சம் சேவகர்கள் மாண்டிருந்தார்கள். இரண்டு நாட்டு சேனைகளின் மத்தியிலிருந்து குழிகளில் அந்த மரித்த சேவகர்கள் சடலங்கள் சிதறி கிடந்தன.

பிரான்சு நாட்டில் இந்த குளிரான யுத்தகளத்தில் தான் ஒரு அற்புதம் நடந்தது! பிரிட்டிஷ் சேவகர்கள் காண ஜெர்மானிய குழிகளில் மத்தியில் மிளகுவர்தி ஏந்தியதை போன்ற மரங்கள் காணப்பட்டன.

ஒரு வாலிப பிரிட்டிஷ் சேவகன் இவ்வாறு தன் நாட்குறிப்பில் எழுதினான் "அந்த ஜெர்மானிய பகுதியிலிருந்து ஒரு கனத்த சத்தம் ஒன்று அந்த குளிர் மேகங்கள் மத்தியிலிருந்து எழும்பி நான் என்னை வளர்த்திய ஜெர்மானிய பெண் பாடி கேட்டிருந்த ஒரு அமைதலான பாடலை பாட கேட்டேன்".

“ஒப்பில்லா, திரு இரா. எல்லாம் அமைதலாக, எல்லாம் பிரகாசமாக."

ஜெர்மானிய சேவகர்கள் பாடி முடித்ததும், பிரிட்டிஷ் சேவகர்கள் திரும்ப தாக்க முடிவெடுத்தார்கள். அனால் தாக்க அவர்கள் குண்டுகளை சுடவில்லை, மாற்றாக அவர்கள் பாடினார்கள்,

“முதல் நன்னாளில், தேவதூதர்கள் பாடினார், வெளிகளில் இருந்த மேய்ப்பர்களுக்கு ..."

இங்கிலாந்து சேவகர்கள் பாடிமுடித்ததும், எதிரிநாட்டு சேவகர்கள் அடுத்த பாடலை பாடினார்கள்.

முடிவில் பிரிட்டிஷ் சேவகர்கள் "பக்தரே வாரும்" என்ற பாடலை பாட துவங்கியபோது, ஜெர்மானியர்களும் கூட சேர்ந்து எதிர் சேனையோடு பாட துவங்கினார்கள். அவர்கள் கூட சேர்ந்து பாடினார்கள்.

ஒரு இரத்தம் படிந்த போர்க்களத்தில், ஒரு மிக அசாதாரணமான காரியம் நடந்தேறியது! இரண்டு எதிரி நாடுகள் ஒன்றாக சேர்ந்து ஒரு யுத்தத்தின் மத்தியில் ஒரு கிறிஸ்துமஸ் பாடலை பாடினார்கள். சிறிது நேரம் முன்பு வரை கொன்றுபோட்டுக்கொண்டிருந்த சேனைகளின் சேவகர்கள் மாறிமாறி வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. இரு நாட்டு சேவகர்களும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கிறிஸ்துமஸ் அன்று ஒரு குண்டுகூட சுடப்படாது என்று ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

அவர்களின் மரித்தவர்கள் மத்தியில் அந்த ஆயிரக்கணக்கான சேவகர்கள் சமாதான பிரபுவின் பிறப்பை கொண்டாடினார்கள்.

ஒரு தனிமையான குரல் பிரெஞ்சு மொழியில் பாட துவங்கியது.. பிறகு மாறிமாறி பாடி, முடிவில் ஆங்கிலத்தில் பாடினார்கள்.

நீ இந்த நாட்களில் யாரோடு சமாதானம் செய்யவேண்டும்? உன்னுடைய ஆத்துமாவையே அழித்துப்போடக்கூடிய ஒரு கொடூரமான யுத்தத்தில் நீ ஈடுப்பட்டிருக்கிறாயா? எல்லா காலத்திற்கும் சமாதானத்தை கொண்டுவர பிறந்த பாலகனால் கிறிஸ்துமஸ் சரித்திரத்தில் சமாதானத்தை கொண்டுவர ஒரு சிறந்த வேளை.

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்