பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 8 நாள்

வேதாகமத்திலேயே மிக தைரியமான வாக்கியத்தை மிக இளம்வயதான, இயேசுவின் தெரிந்துகொள்ளப்பட்ட தாயாகிய மரியாள் சொன்னாள். மரியாளின் வாழ்க்கை பரலோகத்தின் திட்டத்தால் மாறும் என்று தேவதூதன் கொண்டுவந்த செய்திக்கு பதிலாக, மரியாள் தெளிவாக சொன்னால், "இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்." - (லூக்கா 1:38)

ஒரு "அடிமை" என்பவள் விடுதலையாகி இருக்கலாம் ஆனால் இருந்து எஜமானுக்கு ஊழியம் செய்ய தெரிந்துகொள்பவள். மரியாள் விருப்பத்துடன் உலக இரட்சகருக்கு தற்காலிக தங்குமிடத்தை கொடுத்தால், ஏனென்றால் அது தேவனுடைய வாஞ்சையாக இருந்தது. தேவனுடைய இறுதியான வாஞ்சையோடு அவள் உலகம் மோதியபோது, மரியாள் சுயத்திற்கு மறித்து பிதாவாகிய தேவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்தாள்.

நீ கடைசியாக லூக்கா 1:38-ஐ எப்போது மேற்கோள் காட்டினாய்? தேவன் சமீபத்தில் உன்னிடம் ஏதாகிலும் கடினமானதை கேட்டாரா? நீ எவ்வாறு பிரதிகிரியை செய்தாய்?

தேவன் தன் பிள்ளைகளில் ஒருவர் தன் சித்தத்தையும் தன் திட்டங்களையும் கைவிட்டு அவருடைய சிறந்த திட்டத்திற்கு இறங்கும்போது, அநேக வேளைகளில் மனித சித்தத்தின் எதிர்ப்பு அங்கு இருக்கிறது. சோகமான காரியம் என்னவென்றால், மரியாளைப்போல முதிர்ச்சியோடும் ஞானத்தோடும் பதில்சொல்லாமல், நம்மில் அநேகர் அழுது குறைசொல்கிறோம். நம்மில் சிலருக்கு தேவன் என்ன செய்கிறார் என்று அறிந்துதான் செய்கிறாரா என்று கேட்கவும் தைரியமும் உள்ளது.

தேவன் உன்னிடம் என்ன எதிர்பார்த்திருக்கிறார்? ஒரு நேசிக்க கடினமான நபரை நேசிக்க உன்னை கேட்டிருக்கிறாரா? ஒருவேளை ஒரு விசேஷ தேவைகள் உள்ள ஒரு குழநதையை வளர்க்க சொல்லியிருப்பார், அல்லது கவலைப்படாத ஒரு எஜமானனுக்கு ஒல்லியாம் செய்ய சொல்லியிருப்பார். தேவன் அடிமைக்காக தேடுகிறார்: அன்பினால் தனக்கு ஊழியம் செய்ய ஆயத்தமான நபருக்காக அவர் தேடுகிறார். அவருடைய வழிகளுக்கும் திட்டங்களுக்கும் ஒப்புக்கொடுக்கும் மனிதர்களுக்காக தேவன் தேடுகிறார். அவருடைய நம்பமுடியாத திட்டங்களைக்கொண்டு அவர்களுடைய திட்டமிடப்பட்ட ஜீவியத்தை குலைக்க அனுமதிக்கும் நபர்களுக்காக தேவன் தேடுகிறார்! அதுதான் அடிமை என்பதற்கு அர்த்தம்.

மரியாளின் தூய்மையான இருதயமும் உண்மையான தீர்மானமும் அவளுடைய வாக்கியத்தின் கடைசி வார்த்தைகளில் வெளிப்படுகிறது, "... உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது." உன்னுடைய இருதயத்தின் தீர்மானமும் அதுவாக இருக்கிறதா? உன்னுடைய சித்தம் தேவனுடைய வார்த்தைக்கு எதிராக இருக்கும் என்றால், தேவனுடைய வார்த்தை நிச்சயம் வெல்ல வேண்டும். மரியாளைப்போல, மனித சித்தம் மற்றும் தேவனுடைய வார்த்தையின் அதிகாரம் என்ற காரியங்களின் பிரச்னையை இன்றே தீர்த்துவிடு. நான், மரியாளோடு சேர்ந்து, உறுதியாக சொல்கிறேன், எல்லாம் அவருடைய வார்த்தைக்கு இணங்க செய்யப்படும், ஏனென்றால் நான் அவர் அடிமை.
நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்