பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 13 நாள்

எலிசபெத் மனித அளவுகளில் குழந்தை பெரும் வயதை மிஞ்சி இருந்தால். அவள் உடல் பிள்ளைபேறும் சாத்தியக்கூறை இழந்திருந்தது. எலிசபெத் வாலிப வயதில் இருந்தபோதும் கூட குழந்தை பெற கூடாமல் இருந்தால். இப்போது, ஏறக்குறைய 90 ஆண்டுகள் வாழ்ந்திருந்த ஸ்திரியாக, அது நடக்க சாத்தியமே இல்லாமல் இருந்தது. ஒரு நம்பிக்கைக்கான இடமே இல்லாமல் இருந்தது!

ஆனால் தேவன் மனித அளவுகளின் எல்லா தடைகளையும் உடைக்க கூடியவர். அவர் வழிகள் நம் வழிகளை காட்டிலும் பெரியது, அவர் நம்முடைய பெலனில் இருக்கும் பெலவீனங்களை எல்லாம் மாற்ற வல்லவர்.

“எலிசபெத்துக்குப் பிரசவகாலம் நிறைவேறினபோது ...” நிச்சயமாகவே இந்த "காலம்" எலிசபெத்தின் தெரிந்துகொள்ளப்பட்ட காலமல்ல. தேவன் நம் ஜெபங்கள் பதிலளிக்கப்படவும், அவர் ஊழியம் நிறைவேறவும், அற்புதங்கள் நடைபெறவும் தெரிந்துகொள்ளப்பட்ட நேரத்தை கொண்டிருக்கிறார். ஒரு விசைகூட நீ தேவன் உன்னை மறந்துவிட்டாரோ, உன் ஜெபங்களை கேட்கவில்லையென்றோ நினைக்காதே. தேவனுடைய நிர்ணயிக்கப்பட்ட நேரம் முழுமையில் வரும்போது, தேவன் உனக்காக திட்டம் செய்ததெல்லாம் நடக்கும்.

“கர்த்தர் அவளிடத்தில் தம்முடைய இரக்கத்தை விளங்கப்பண்ணினாரென்று அவளுடைய அயலகத்தாரும் பந்துஜனங்களும் கேள்விப்பட்டு, அவளுடனே கூடச் சந்தோஷப்பட்டார்கள்.”

அநேக வேளைகளில் தேவன் நம்முடைய நிர்ப்பந்தமான ஜெபங்களுக்கு "காத்திரு" என்று பதில் தருகின்றார் என்று நினைக்கிறன், அதன்மூலம் மனிதனுடைய நிச்சயத்தை காட்டிலும் அவருடைய மகிமை வெளிப்படும்படியாக. அநேக ஸ்த்ரிகள் வாலிப வயதில் பிள்ளை பெறமுடியாமல் இருக்கிறார்கள், அனால் தேவனுடைய தலையீடு வரும்போது அதே ஸ்திரி என்பது வயதுகளில் பிள்ளை பிறப்பின் அற்புதத்தை உணருகிறார்கள்!

எலிசபெத்தின் அயலகத்தாரும் பந்துஜனங்களும் பட்ட சந்தோஷத்தை உங்களால் யூகிக்கமுடிகிறதா? அந்த கிராம தெருக்களில் பெண்கள் நடனமாடி கொண்டாடும் காட்சியை உங்களால் காணமுடிகிறதா? அவளுடைய நண்பர்கள் யெகோவாவை துதித்து கைகளை உயர்த்துவதை உங்களால் காணமுடிகிறதா?

யோவான் தன் தாயின் கரங்களில் தவழும்போது, ஏறக்குறைய 100 வயதான சகரியா தன் சிறு குழநதையின் கண்களில் பார்த்தபோது, தேவன் மகிமைப்பட்டார். ஜெபங்கள் பதிலளிக்கப்பட்டன. அவர்கள் ஜீவிய சரித்திரம் துவங்கியது.

எலிசபெத் சகரியாவின் ஜீவியம் நீதியான ஜீவியத்தை வாழ ஒரு அழைப்பாகும், அது தொடர் ஜெபம் கொண்டுவரும் வாக்குத்தத்தம் ஆகவும் இருக்கிறது. தேவன் உன்னை குறித்த எல்லாவற்றையும் நிறைவேற்ற வல்லவராக இருக்கிறார். அவர் பங்கு அற்புதங்களை செய்வது ... உன் பங்கு இடைவிடாமல் ஜெபிப்பதும் அவர் இருதயத்தை மகிழ்விப்பதுமாகும்.
நாள் 12நாள் 14

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்