பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
மரியாள் பிரசவத்தின் முதிர்ந்த நிலையில் இருக்கவே மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லேகேமிற்கு செல்லும் 80 மையில் தூரம் ஏறக்குறைய ஒரு வாரம் எடுத்து இருக்கும். அந்த பிரயாணத்தின் காலம் சௌகரியமாக இல்லாதபோதும், கிராம கிணற்றில் அவதூறு பேசி, பிரசவ மாதங்களை கணக்கிட்டு கொண்டிருந்த பெண்களிடமிருந்து தப்பிப்பது ஒரு உதவியாக தான் இருந்திருக்கும். அகஸ்து ராயன் விதித்திருந்த கட்டளையினால் கணக்கிடப்படுவதற்காக மரியாளும் யோசேப்பும் அவர்கள் தங்கியிருந்த கிராமத்தை விட்டு பிரயாணிக்க வேண்டேயிருந்தது.
மரியாளும் யோசேப்பும் பெத்லேகேமிற்கு உள்ளாக நுழைந்தபோது, தெருக்கள் மக்களால் நிரம்பியிருந்த்தது. மரியாள் அந்த கூட்டத்தின் மத்தியில் நெருக்கப்பட்ட வேளையில் தான் தன் கர்ப்பத்தின் முதல் வலியை உணர்ந்தாள். அந்த கூட்டமான தெருக்களில் அவள் பிரசவ நீர் உடைந்திருக்க கூடும், அவள் துணியையும் அவள் பயணித்த கழுதையையும் ஈரப்படுத்தியிருக்கும்.
அவள் ஒருவேளை வலியில் அமைதலாக யோசேப்பிடம், "யோசேப்பே! நான் இளைப்பாற ஒரு இடத்தை ஆயத்தப்படுத்து!" என்று சொல்லியிருக்கக்கூடும்.
யோசேப்போ ஒரு குகை ... அல்லது ஒரு தொழுவம் ... ஒரு முன்னணையை தவிர ஒன்றையும் காணமுடியவில்லை, அவர்கள் மகனை வரவேற்க.
பிரயாணம் செய்து வந்திருந்த கூட்டத்தின் விலங்குகளால் அந்த முன்னணை நிச்சயம் நிரம்பியிருந்திருக்கும். அது சிறுநீர் மற்றும் மலத்தின் நாற்றத்தால் நிறைந்திருந்திருக்கும், யோசேப்பு அந்த வைக்கோலின் மத்தியில் ஒரு சுத்தமான இடத்தை நிச்சயம் சிரமப்பட்டிருப்பார். அவர் மரியாளுக்காகவும் பிறக்கவிருந்த குழந்தைக்காகவும் ஒரு இடத்தை உருவாக்கி வைக்கோலை எடுத்தபோது ஒருவேளை ஒன்றோ இரண்டோ எலி அங்கிருந்து ஓடியிருக்கும். மரியாள் பிரசவித்தபோதும் இரத்தம் சிந்தியபோதும் மாடுகள் வைக்கோலை தின்றுகொண்டும் ஆடுகள் சத்தமிட்டுக்கொண்டும் இருந்திருக்கும். இந்த இழிவான பூமிக்கடுத்த சூழலில்தான் மனிதகுலத்தின் இரட்சகர் பிறந்தார்!
முதன்முறையாக பிறந்த தன் ஆண் குழந்தையை கண்டபோது அந்த இளவயது தாயின் முகத்தை சிந்திக்கும்போது என் இருதயம் சற்றே நிற்கிறது! அவள் தேவனின் முகத்தில் நோக்கிப்பார்த்தால் ... அவர் திரும்ப அவளை பார்த்தார். தேவன் தன் சிறிய விரலையும் இருதயத்தையும் அவளை சுற்றி பிடித்தார்.
அவர் அவளுடைய குமாரன் ... ஆனாலும் அவளுடைய தேவன். அவர் அவளுடைய குமாரன் ... ஆனாலும் அவள் ராஜா.
அவரிடமிருந்து அவளுடைய கண்களை அவளால் எடுக்க முடியவில்லை, அவர் மீது அவ்வளவு நேசம் வைத்தால். மிக பெரிய அற்புதம் ... அவருடைய கண்களை அவளைவிட்டு அவர் எடுக்கவில்லை, மனிதகுலத்தின் மீது அவர் அவ்வளவு நேசம் வைத்தார்.
கிறிஸ்துமஸின் உண்மையான அர்த்தத்தை விட்டு உன் கண்களை எடுக்காதே. இயேசு பிறந்தபோது ... அவர் உனக்காகவும் பிறந்தார் என்பதை நினைவில் வைத்துக்கொள். முன்னணியின் குழந்தை உன் இருதயத்தையும் சுற்றி அவர் நேசத்தை வைக்க இடம்கொடு.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்