பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 14 நாள்

வேத சரித்திர வல்லுனர்கள் "பெத்லேகேம்" பட்டணத்தில் ஏறக்குறைய பத்து லட்சம் நபர்கள் அன்று தெருக்களில் உலா வந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

உங்கள் பட்டணத்தில் பத்து லட்சம் நபர்கள் வந்தால் என்ன ஏற்படும்? உங்கள் சாலை போக்குவரத்திற்கு என்னவாகும்? உங்கள் கடைகளில் கூட்டம் பற்றி என்ன? இல்லாவிட்டால் உங்கள் தங்கும் விடுதிகளுக்கு என்னவாகும்?

நாம் பெத்லேகேமில் இந்த மறக்கமுடியாத இரவில் இருந்த "மும்முரத்தை" உணர்ந்ததில்லை. கழுதைகள் கத்திக்கொண்டும், கடைக்காரர்கள் சத்தம் இட்டுக்கொண்டும்; ஒட்டகங்கள் நடைபாதைகளில், மக்கள், வரி வசூலிப்பவர்கள் மற்றும் பட்டன அதிகாரிகள் பெத்லேகேமின் அழுக்கான தெருக்களில் தள்ளி முட்டி மோதிக்கொண்டும் இருந்தனர். எல்லா தெருக்களிலும் வேர்வை நனைந்த உடல்களும், நாற்றமும் இருந்தது.

மக்கள் எல்லோரும் கோபத்தின் விளிம்பிலும், அவர்கள் சட்டைப்பைகள் காலியாகவும், அவர்கள் அனைவரும் இருந்த பண ஆசைகொண்ட அரசிற்கு எதிராகவும் இருந்தனர்! அவர்கள் எங்கு என்று அறியாமலும் எங்கு செல்லுகிறார்கள் என்றும் அறியாமல் இருந்த மனிதகுலம் அது. இது 21-ஆம் நூற்றாண்டிற்கு பொருத்தமாக இருக்கிறது, அல்லவா?!

தேவன் இந்த குழப்பம் மற்றும் சச்சுருவின் நேரத்தை தெரிந்தெடுத்தார் ... கோபமான குழப்பம் மற்றும் பணமில்லாத குழப்பம் ... அவருடைய குமாரன் பிறக்கும்படியாக. அவருடைய குமாரனை கொண்டு மனிதகுலத்தின் போக்குவரத்து கூட்டத்தை சந்திக்க திட்டமாய் இருந்தார்.

நாம் நம்முடைய வாழ்க்கையை சரித்திரத்தின் மும்முரமான குழப்பமான நிலையில் மாற்றி இருக்கிறோம். கிறுஸ்துமஸின் அழகு என்னவென்றால் அந்த மும்முரமான குழப்பமான நிலையை அவருடைய பிரசன்னம் மாற்றியது!

தேவன் நம்முடைய விலையுயர்ந்த ஜீவியத்தை சரிசெய்ய விரும்பினார், ஆகவே அவர் சமாதான பிரபுவை அனுப்பினார்.

தேவன் நம்முடைய குழப்பத்தின் பிரச்சனைகளுக்கு பதிலை எதிர்பார்ப்போம் என்று அறிந்து நமக்கு பதிலாக பரலோகத்தின் செல்ல குமாரனை பதிலாக அனுப்பினார்.

மனிதகுலத்தின் முடிவில்லாத சத்தத்தின் நடுவில், ஒரு இரட்சகர் பிறந்தார். இந்த ஆண்டு என் ஜெபம் என்னவாக இருக்கிறது என்றால், இந்த அதிக மும்முரமாக வாழ்க்கையில், நீங்கள் அந்த தொழுவத்தின் பாலகனை பார்க்க வேண்டும் என்பதுதான்.

நீங்கள் இந்த காலத்தின் நிலையற்ற காரியங்களினால் கிறுஸ்துமஸின் திவ்விய அழைப்பை இழந்துவிடாதீர்கள்! கிறுஸ்துமஸின் மகிமை அவருடைய பிரசவத்தின் அற்புதம் தான் ... தொழுவத்திலிருக்கும் பாலகன்.

வேதவசனங்கள்

நாள் 13நாள் 15

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்