பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 19 நாள்

ஞானிகள் நட்சத்திரங்களை படிக்கும் வான சாஸ்திரத்தில் தேறினவர்களாக இருந்தார்கள். இந்த படித்த, புத்தியில் தேறின மனிதர்கள் யூதர்கள் அல்ல-அவர்கள் கிழக்கில் இருந்து வந்த புறஜாதி ஜோதிடர்கள். இந்த நாட்களில் இப்படிப்பட்ட ஞானிகளை "மந்திரவாதிகள்" என்று தான் அழைப்போம். இந்த நாட்களில் நாம் இந்த மக்களை தவிர்த்து செல்லவே யோசிப்போம். ஒருவேளை 21-ஆம் நூற்றாண்டில், இவர்களை மனிதநேயவாதிகள் என்றும், படிப்பறிவில்லாதவர்கள் என்றும், பைத்தியகாரர்கள் என்றும் ஒருவேளை நாம் அழைத்திருப்போம்.

இந்த மந்திரம் செய்யும் மக்கள் ஏரோது ராஜாவை தேடி வந்தார்கள், இந்த புதிய ராஜா எங்கே என்று அறியும்படி. முடிவில் யூதரின் ராஜாவாக பிறந்தவரை ஆராதிக்க வேண்டும் என்பதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது.

ஏரோது ராஜா இந்த செய்தியை கேட்டு கலங்கி ஆசாரியர்களை கூட்டி இந்த மேசியா எங்கு பிறப்பார் என்று அறிய முயற்சித்தான். இந்த ஆலய மூப்பர்கள் ஏரோது ராஜாவுக்கு மீகா எழுதிய தீர்க்கதரிசன வார்த்தையை காட்டி, இந்த ப்ரதிலிருந்து அனுப்பப்பட்ட ஆட்சியாளர் பெத்லேகேமில் பிறப்பார் என்று சொன்னார்கள்.

ஏரோது ராஜா இன்னும் ஒரு முறை அந்த ஞானிகளை சந்தித்து பேசி பெத்லேகேமிற்கு அனுப்பினான், மெசியாவை கண்டபிறகு தன்னிடம் வந்து அறிவிக்க சொன்னான், அவனும் வந்து பணிந்துகொள்ள விரும்பியதாக சொன்னான்.

ஏரோது ராஜா உண்மையில் இயேசுவை ஆராதிக்க விரும்பினாரா? நிச்சயம் இல்லை! ஏரோது ராஜா பூமிக்கு சமாதானத்தை கொண்டுவந்த பாலகனை கொன்றுபோட சூழ்ச்சி செய்தான். ஏரோது ராஜாவின் ஆராதனை உதட்டளவில் தான் இருந்தது. அவன் இருதயம் கிறிஸ்துவாகிய பாலகனை ஆராதிக்க விருப்பம் கொள்ளவே இல்லை, அவன் வாய் அந்த ஞானிகளை ஏமாற்ற பொய் தான் சொன்னது.

இந்த கிறுஸ்துமஸில் உங்கள் திட்டம் என்ன? அவருக்கு உங்கள் உதட்டளவில் மாத்திரம் ஆராதனை செலுத்துவீர்களா? அவர் தேவன் என்று உதட்டில் சொன்னாலும் வேறு விதமாக நீங்கள் கிரியை செய்வீர்களா?

கிறிஸ்துமஸ் நம் இருதயத்தின் உள் எண்ணம் வெளிப்படும் வேளையாக இருக்கிறது. நீ வாயளவில் மாத்திரம் அவரை ஆராதிப்பாயா... அல்லது அவருடைய ஆராதனையில் உன் இருதயமும் ஜீவியமும் சேர்ந்து துதிக்குமா? நீ மாத்திரமே ஆராதனையின் தன்மையை முடிவு செய்யமுடியும். வெறும் உதட்டளவில் ஆராதனையா இல்லாவிட்டால் தொழுவத்திலிருக்கும் இயேசு பாலகனுக்கு ஜீவிய நாளெல்லாம்கூடிய அன்பான கிரியைகளா என்று.

ஓ வாருங்கள்! நாம் அவரை தொழுவோம்!
நாள் 18நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்