பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி
கிறிஸ்துமஸ் எல்லா மனுகுலத்திற்கும் பூமியில் இருக்கும்போதே பரலோகத்தின் அனுபவத்தை உணர ஒரு வாய்ப்பு அளிக்கிறது. இயேசு பூமிக்கு வந்தபோது, அவர் இருதயத்திற்கு நேராக சந்தோசம் எட்ட வழி உண்டாக்கினார்!
ஒரு விசுவாசிக்கு கிறிஸ்துமஸின் ஒரு முக்கிய அர்த்தம் அவருடைய பிரசன்னத்தில் சந்தோஷத்தோடு பிரதிகிரியை செய்வதுதான். இது நீ ஒரு சூழ்நிலையின் சவாலோ அல்லது சோர்வினாலோ பாதிக்கப்பட்டிருந்தால் இன்னும் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும். இந்த கொண்டாட்டங்கள் உங்கள் வலியை மாற்றும் என்று நினைக்காதீர்கள் - அவருடைய பிரசன்னம் மாத்திரமே இந்த வல்லமையை கொண்டிருக்கிறது!
இயேசு பிறக்க ஏறக்குறைய 800 ஆண்டுகளுக்கு முன், தீர்க்கதரிசி ஏசாயா மேசியா வரும்போது என்ன செய்வார் என்று தெளிவாக விவரித்தார். "மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்". (ஏசாயா 53:4) இயேசு நம்முடைய பாவங்களை சிலுவையில் சுமக்க மாத்திரம் வரவில்லை, நீ தூக்கிக்கவும் கவலைப்படவும் செய்யக்கூடிய எல்லா ஜீவிய காரியங்களில் இருந்தும் துயர் நீக்க செய்கிறார். இயேசு அந்த கவலைகள் துயரங்கள் அனைத்தையும் சிலுவைக்கு எடுத்து சென்று அவைகளுக்காக மரித்தார், அதன்மூலம் நீ சந்தோஷத்தோடு வாழமுடியும்!
யோவான் தன்னுடைய தாயின் கருவிலிருக்கும் போதே, இயேசுவினால் கர்ப்பந்தரித்திருந்த மரியாள் அறைக்குள் வந்தபோது சந்தோஷத்தினால் துள்ளினார். பிறக்காமல் இருந்தாலும் யோவான், இயேசுவின் பிரசன்னத்தில் உண்டாகும் சந்தோஷத்திற்கு பிரதிகிரியை செய்தார். "இதோ, நீ வாழ்த்தின சத்தம் என் காதில் விழுந்தவுடனே, என் வயிற்றிலுள்ள பிள்ளை களிப்பாய்த் துள்ளிற்று." (லூக்கா 1:44) துள்ளிற்று என்ற பதம் கிரேக்க மொழியில் 'ஸ்கிர்டோ' என்று உள்ளது, அதற்கு சந்தோஷத்தினால் துள்ளுவது என்று அர்த்தமாகும்.
"ஸ்கிர்டோ" என்ற பதம் புதிய ஏற்பாட்டில் இன்னும் ஒரு இடத்தில் மாத்திரம் காணப்படுகிறது லூக்கா 6:22 & 23: "மனுஷகுமாரன் நிமித்தமாக ஜனங்கள் உங்களைப் பகைத்து, உங்களைப் புறம்பாக்கி, உங்களை நிந்தித்து, உங்கள் நாமத்தைப் பொல்லாததென்று தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அந்நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டுக் களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள்பலன் மிகுதியாயிருக்கும்; அவர்களுடைய பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படியே செய்தார்கள்:“
யோவானைப்போல நாமும் இயேசுவின் பிரசன்னத்தை உணரும்போது எல்லாம் சந்தோஷத்தினால் துள்ள வேண்டும். நாம் பாடு அனுபவிக்கும்போதெல்லாம் சந்தோஷத்தினால் துள்ள வேண்டும். காயப்படும்போது சந்தோஷத்தினால் துள்ளவேண்டும். இப்படிப்பட்ட பிரதிகிரியை சொல்லி புரியவைக்க கூடாதானாலும், அவருடைய பிரசன்னத்தில் நேரத்தை செலவழித்தால் நீங்கள் துள்ள முடியும். அவர் சமூகம் நீங்கள் 'ஸ்கிர்டோ' செய்ய உதவும்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.
More
இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்