பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 21 நாள்

ஞானிகள் முகங்குப்புற விழுந்து இயேசுவை ஆராதித்தார்கள். ஏரோது ராஜாவைப்போல அல்லாமல் இது முழு இருதயத்தோடு செய்யப்பட்ட உண்மையான ஆராதனை. ஏரோது ராஜா யூதர்களின் ராஜாவை ஆராதிக்க வேண்டும் என்று சொன்னான், ஆனால் அது வெறும் வாய் பேச்சுதான் அவனுடைய எண்ணமும் அதுவாகத்தான் இருந்தது. ஏரோது ராஜா ஆராதனையை குறித்து பேசின வேளையில், அவனுடைய பயங்கரமான இருதயத்தில் கொலைபாதகம் தான் இருந்தது.

இந்த கல்வியறிவு பெற்ற மதிக்கத்தகுந்த மனிதர்களான ஞானிகள், ஏறக்குறைய 800 அல்லது 900 மையில் தூரம் பிரயாணித்து பிறந்த ராஜனை தரிசித்து அவருடைய சமூகத்தில் முகங்குப்புற விழுந்தார்கள். இயேசு ஒரு பாலகனாக, ஒருவேளை 2 வயதாக இருந்திருப்பார், அவர்கள் வந்து சேர்ந்த வேளையில் ஆனாலும் அவர்கள் ஆராதனையிலும் அதிசயத்திலும் முகங்குப்புற விழுந்தார்கள்.

இயேசு பிஞ்சு குழந்தை வார்த்தைகளை பேசிக்கொண்டு தன் தாயிற்கு மாத்திரம் புரிந்த வார்த்தைகளை சொல்லியிருந்திருப்பார், ஆனாலும் இந்த படித்த ஞானிகள் காலத்தின் ரகசியங்களை புரிய தெரிந்தவர்கள், அவருடைய நித்தியா சமூகத்தில் முகங்குப்புற விழுந்தார்கள்.

உண்மையான ஆராதனை எப்போதும் ஒரு நிலைப்பாட்டின் மற்றும் அந்தஸ்தின் மாற்றத்தை குறிக்கும். பரிசுத்த பாலகனின் பிரசன்னத்தில், இந்த மனிதர்கள் தங்கள் படிப்பையோ கலாச்சாரத்தையோ குறித்து கவலைப்படவில்லை. அவர்கள் இந்த பாலகன் ஆராதிக்கப்பட தக்கவர் என்று மாத்திரம் உணர்ந்து அவருடைய பாதத்தில் முழுஇருதயத்தோடு பணித்தார்கள். இந்த கிருஸ்துமஸ் நாட்களில் நீயும் இயேசுவின் பிரசன்னத்தில் முகங்குப்புற விழுவாயா?

உண்மையான ஆராதனை சந்தோஷத்தையும் கூட கொண்டிருக்கும்! இந்த ஞானிகள் இயேசுவின் பிரசன்னத்தில் கிடைத்த சந்தோஷத்தால் அவர்களுடைய படிப்புஅறிவு முற்றிலும் தள்ளாடிபோவதை கண்டார்கள். அவர்களுடைய படிப்பு அறிவை ஒரு துதியின் ஆடாயாக கொண்டிருந்தார்கள். நீயும் மனித ஆசாபாசங்களை விட்டுவிட்டு உன் வாழ்வில் அவருடைய சந்தோசம் உட்புகுற அனுமதிப்பாயா?

உண்மையான ஆராதனை விலைமதிப்புள்ள ஏதாகிலும் ஒன்றை விட்டுவிட செய்யும். ஞானிகள் அந்த சிறிய ராஜாவுக்கும் அவருடைய குடும்பத்திற்கும் விலையேறப்பெற்ற பொக்கிஷங்களை கொண்டுவந்தார்கள். நீ இந்த கிருஸ்துமஸ் தினத்தில் இயேசுவுக்காக எந்த விலையேறப்பெற்ற பொக்கிஷத்தை கொண்டுவருவாய்?

ஆராதனைதான் தேவனும் மனிதகுலமும் சந்திக்கும் இடமாக இருக்கிறது. மனிதகுலம் சந்தோஷத்தால் முகங்குப்புற விழும் தருணம் தான் அது!

நாம் அநேகர் செய்யும் தவறு என்னவென்றால், அற்புதமான கிருஸ்துமஸ் நிகழ்வை எதோ மாயத்தை போல புரிந்துகொள்கிறோம். கிறிஸ்துமஸின் அற்புதம் நம்முடைய தெரிந்துகொள்ளுதலை பொறுத்தே இருக்கிறது. நீ தவறாக பனிக்கட்டிக்கும், ஈவுகளுக்கும் குடும்பத்திற்கும் தெரிந்துகொள்வாயா? இல்லாவிட்டால் கிறுஸ்துமஸின் அற்புதத்தை காண உன் கண்களை உயர்த்துவாயா?
நாள் 20நாள் 22

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்