பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 18 நாள்

தேவதூதர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்வின் உள்ளான முக்கியமான பங்காக இருந்தார்கள். பரத்திலிருந்து தேவனால் அனுப்பப்பட்ட இந்த தூதுவர்கள் இல்லாமல் கிறிஸ்துமஸ் நிச்சயம் நடந்திருக்கவே முடியாது. தூதர்கள் வெள்ளை நிற நீளமான ஆடைகள் அணிந்து, தலையின்மீது ஒரு ஒளி வட்டத்தை கொண்டு, இறக்கைகள் கொண்டு பறந்தார்களா என்று நமக்கு தெரியாது, ஆனால் நாம் அறிவது என்னவென்றால் இந்த மறக்கமுடியாத நிகழ்வாகிய தேவனுடைய இருதயத்தின் செய்தியை அவர்கள் கொண்டுவந்தார்கள்!

தேவதூதர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்வில் நான்கு முறை காட்சியளிக்கிறார்கள், ஒவ்வொருமுறையும், அவர்கள் நடக்கவிருந்த நிகழ்வின் வித்தியாசமான செய்தியை கொண்டுவந்தாலும், அவர்கள் செய்தி ஒன்றாகத்தான் இருந்தது, "பயப்படாதீர்கள்!" இதுதான் தேவதூதன் சகாரியாவிடம், மரியாளிடம், யோசேப்பிடம், முடிவில் மலைகளில் தங்கியிருந்த மேய்ப்பர்களிடமும் சொன்ன செய்தி.

“பயப்படாதீர்கள்!”

நான் நம்புகிறேன், இதுதான் இந்த கிருஸ்துமஸ் நாட்களில் பரலோகம் உங்களுக்கு சொல்ல விரும்பும் செய்தியாகவும் இருக்கும் என்று. கிறிஸ்துமஸ் என்பது இயேசுவும் பயமும் ஒன்றோடு ஒன்று இணங்கி இருக்கவே முடியாதவை என்று சொல்லும் ஒரு நிகழ்வு. இயேசு சூழ்நிலைக்குள்ளாக வரும்போது, பயப்பட வேண்டிய தேவை இல்லை. அவருடைய சமூகம் பயத்திற்கான எல்லா காரணங்களையும் வல்லமையாக நீக்கிவிடும்.

நீங்கள் பயத்தை விட்டுவிட்டு அவர் சமூகத்திற்கு வர வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த கிறிஸ்துமஸ், மற்றும் வரும் ஆண்டின் ஒவ்வொரு நாளும், இயேசு உங்கள் இருதயத்தில் பிறந்துவிட்டால், நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ நிச்சயம் வேண்டியத்தில்லை. இந்த 2000 ஆண்டுகளில் கிறுஸ்துமஸின் செய்தி மாறவே இல்லை, இந்த தேவதூதர்கள் சொன்ன செய்தி இந்த 21-ஆம் நூற்றாண்டில் இன்னும் தெளிவாக ஒலிக்கிறது, "பயப்படாதீர்கள்!"

உங்கள் சூழ்நிலைகள் உங்களை சுற்றிலும் விழுந்து நொறுங்கும்போது, "பயப்படாதீர்கள்!"

உங்களுக்கு தேவையான பணம் இல்லாதபோது, உங்களை நினைவூட்டுங்கள், "பயப்படாதீர்கள்!"

ஏமாற்றம், வலி, தனிமையை நீங்கள் உணரும்போது, உங்களை நினைவூட்டுங்கள், "பயப்படாதீர்கள்!"

தேவன் அவர்மீது தன் மனதை வைப்பவர்களுக்கு அவருடைய சமாதானத்தை கொடுப்பதாக வாக்களித்திருக்கிறார். சமாதானம் என்பது பிரச்சனை எதுவும் இல்லாத நிலை அல்ல; அது தேவனுடைய சமூகம். இயேசு இருப்பதால், இந்த கிருஸ்துமஸ், மற்றும் ஒவ்வொரு கிறுஸ்துமஸும், நீங்கள் அதிகமான திருப்தி கொடுக்கும் சமாதானத்தால் நிரம்பி இருக்கலாம்!
நாள் 17நாள் 19

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்