பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 17 நாள்

டேவிட் டைலர் நவம்பர் மாதம் ஒரு நாள் பள்ளியிலிருந்து துக்கத்தோடு வீட்டிற்கு திரும்பினான். தாடையில் கண்ணீர் பொங்க, தன் ஆசிரியை கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் அவன் பாட முடியாது என்று சொல்லிவிட்டதாக தன் அம்மாவிடம் சொன்னான்.

“நான் மிகவும் மோசமாகவும் சத்தமாகவும் பாடுகிறேன் என்று சொன்னார்கள்,” என்று அழுதுகொண்டே டேவிட் சொன்னான்.

டேவிட்-இன் அப்பா முன் அறையில் அமர்ந்துகொண்டு மத்திய செய்தித்தாளை வாசித்து கொண்டே தன் மகனின் சோகத்தை கேட்டுக்கொண்டு இருந்தார். அவருக்கு மிகவும் கோபமும் எரிச்சலும் வந்தது. எப்படி ஒரு ஆசிரியை இவ்வாறு ஒரு பிள்ளைக்கு செய்யமுடியும்?

திரு டைலர் தன் மகனுக்கு பாட கற்றுத்தர முடிவெடுத்தார். அன்று இரவு உணவுக்கு பிறகு, டேவிட்-ஐ கூட்டிக்கொண்டு குடும்ப பியானோ இசைக்கருவியிடம் நிற்கவைத்து பாட கற்றுக்கொடுத்தார். "நள்ளிரவில் மா தெளிவாய்" என்ற கிறிஸ்துமஸ் பாடலை பாட துவங்கினார். டேவிட் பாடியபோது, ஒரு பூனையின் குரல் வெளிவந்தது.

“டேவிட் பாட துவங்கும்போது நன்றாக கேட்டு பிறகு பாடு,” என்று பொறுமையோடு திருத்தினார் திரு. டைலர்.

டேவிட்-இன் இரண்டாவது முயற்சி முதல் முறையை காட்டிலும் மோசமாக இருந்தது! அப்பா கைவிட நினைத்தபோது, "ஒரு அப்பா செய்யவில்லை என்றால் யார் மகனுக்காக உதவுவார்கள்?" என்று யோசித்தார்.

நவம்பர் மாதம் முடிந்து டிசம்பர் மாதமும் ஆனது. திரு. டைலர் டேவிட்-ஓடு ஒவ்வொரு இரவும் பியானோ-வை கொண்டு பாட கற்றுக்கொடுத்தார். "மாந்தருக்கு சமாதானம் நாள் மனம்..."

டேவிட் தன் ஆசிரியையிடம் பாட வேண்டிய நாள் வந்தபோது, அவன் நிகழ்ச்சியில் பாடலாம் என்று சொன்னார்கள். டேவிட் முதல் வரிசையில் நின்று அந்த மூன்றாம் வகுப்பு கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பாடினான். அவன் தூதனைப்போல சரியான ராகத்தோடு பாடினான், "அமர்ந்தே பூமி கேட்டதாம் வின் தூதர் கீதமே!"

கிறிஸ்துமஸுக்கு முந்தைய இரவில், திரு. டைலர் ஜன்னல் வழியாக பார்த்து தன் மகன் வானத்தை பார்த்துக்கொண்டு நிற்பதை கண்டார்.

அப்பா ஒன்றும் சொல்லாமல் டேவிட்-இன் பக்கத்தில் சென்று அனைத்து கொண்டார். மகன் அப்பாவின் மார்பில் சாய்ந்து சொன்னான், "அமர்ந்தே பூமி கேட்கிறது, அப்பா. அந்த பாடல் சொல்வதுபோல"

“நீங்கள் அதை கேட்கிறீர்களா அப்பா? தூதர்களின் கீதத்தை? என்னால் கேட்க முடிகிறது... உங்களால் முடிகிறதா அப்பா?"

அந்த அப்பா கிறிஸ்துமஸ் நாட்களில் தன் மகனுக்கு ஒரு பாடலை கற்றுக்கொடுப்பதாக நினைத்தார். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், அந்த மகன் இருவரும் கேட்கும்படியாக கற்றுக்கொடுத்தான் ... அந்த தூதரின் கீதத்தை.
நாள் 16நாள் 18

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்