பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 16 நாள்

கிறிஸ்துமஸ் நிகழ்வின் மேய்ப்பர்கள் அநேக வாரங்கள் வெட்டவெளியில், மழையில், காற்றில் கடத்தி ஆடுகளோடு வெளியில் தங்கியிருந்தனர். இந்த அழுக்காக மண்ணோடு தங்கின மனிதர்கள் அவர்கள் பாதுகாப்பிலிருந்த ஆடுகளை காக்க அந்த காரிருளான இரவில் நெருப்பை சுற்றி அமர்ந்து குளிர் காய்ந்துகொண்டிருந்தார்கள். அந்த ஆடுகள் தங்கள் சுபாவத்திற்கு இணங்க புத்தியற்று, கீழ்ப்படியாமல், அமைதியற்று, நாற்றமடித்து கொண்டு இருந்தன.

அவர்கள் கைகள் அழுக்காக கொண்ட படிப்பறிவு இல்லாத மனிதர்கள். அவர்கள் நம்பிக்கையற்ற உணர்வை கொண்டிருப்பார்களோ என்று நான் எண்ணுகிறேன்... எதிர்பார்க்க ஒன்றும் இல்லாமல், அவர்கள் ஜீவியத்தில் ஒன்றும் மாறப்போவதில்லை என்று அறிந்தவர்களாக இருந்திருப்பார்கள். ஆடுகளின் எச்சில் கையில் தாங்கி ஆடுகளின் கழிவு கால்களில் கொண்டிருக்கும் பொது ஜீவியம் அர்த்தமில்லாமல் தான் மாறும்.

எதிர்பார்க்காத விதமாக பரலோகம் இந்த மேய்ப்பர்களின் சிறிய, குளிரான, இருளான உலகத்திற்குள்ளாக திடீரென வெடித்து புகுந்தது. அவர்களின் தேங்கியிருந்த, மாறாத ஜீவியத்தில் தூதர்களின் பாடல் உட்புகுந்து அவர்கள் யுத்தங்களை மாற்றி பரலோகத்தின் சந்தோஷத்தை கொண்டுவந்தது! நட்சத்திரங்கள் அபூர்வமான மகிமையான வண்ணங்களில் வெடித்து கீழே விழுந்தன, பரலோகம் திறந்து ஒரு பிரமாண்ட தூதர்களின் பாடல்கூட்டம் இன்றும் நாம் கேட்டு உணரும் விதத்தில் பாடல் பாடினர்!

இயேசு இந்த இருளான குளிரான உலகத்திற்குள்ளாக பிரவேசித்து, இன்றும் அவர் அளிக்கும் ஈவான பரலோகத்தின் சந்தோஷத்தை கொண்டுவந்தார். அவருடைய பிரசன்னம் மேய்ப்பர்கள் நடனமாடவும், தூதர்கள் பாடவும் செய்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன் பிறந்த பாலகனால் உன்னுடைய இருதயம் சந்தோஷ கொண்டாடத்தால் மகிழ்கிறது.

நீ இயேசுவினால் சந்தோஷத்தை பெற்றுக்கொள்ள முடியும்... அந்த பாலகனினால் சமாதானத்தோடு நடக்க முடியும்.

தேவதூதர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை வர்ணிக்க சொன்ன முதல் வார்த்தை "சந்தோஷம்" ... அது உன்னை வர்ணிக்கவும் சொல்லவேண்டிய முதல் வார்த்தையாக இருக்கவேண்டும்! சந்தோஷத்தினால் நீ வாழ்நாள் முழுவதும் முத்தரிக்க படுவதினால், சந்தோசம் ஒரு கிறிஸ்துவனின் அடையாளமாக இருக்கிறது. அவருடைய சமூகத்தில் நீ சந்தோஷமான பாத்திரமாக மாறுகிறாய்.

இந்த இருளான அமைதலற்ற உலகத்தில் நீ கிறிஸ்து பாலகனை சுமந்துசெல்லும்போது, உன்னுடைய ஜீவன் நோக்கமுள்ளதாக மாறும். அவருடைய சந்தோஷத்தை மனிதகுலத்திற்கு எடுத்துச்செல்லும்போது உன்னுடைய ஜீவியத்தின் நம்பிக்கையற்ற தன்மை மாற துவங்கும்.

நாமும் இந்த திவ்விய சுதந்திரத்தை பெற்றுக்கொள்ள மரியாள் தேவனால் கர்பவதியானால்! பரலோகத்தின் சுதந்திரம் சந்தோஷம் என்று பெயர்கொண்டது!
நாள் 15நாள் 17

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்