பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 9 நாள்

நிச்சயதார்த்தம் என்பது வாலிப ஜோடியின் ஜீவியத்தில் நடக்கும் ஒரு சந்தோஷமான நிகழ்வு. அது வரவிருக்கும் சந்தோஷங்களை கனவு காணும் மணிநேரங்களை கொண்ட நேரம். அது அன்பு ஒரு பரிபூரண நம்பிக்கை தகுந்த உணர்வு என்று நினைக்க வைக்கும் ஒரு நேரம்.

யோசேப்பு மரியாளின் அன்பு கதை மிகவும் மோசமாக புரிந்துகொள்ளமுடியாத விதத்தில் தடுக்கப்பட்டது. மரியாள் கர்பந்தரித்திருந்தாள், யோசேப்பு தான் தகப்பன் இல்லை என்று அறிந்திருந்தான். மரியாள் பரிசுத்த ஆவியினால் கர்ப்பந்தரித்தேன் என்று சொன்னாலும் கூட, நிச்சயம் யோசேப்பு யோசித்திருந்திருப்பான் மரியாள் கறைபட்டிருப்பாளோ என்று.

மரியாள் மாயையாக நினைக்கிறாளா, என்று யோசேப்பு யோசித்தானா? இல்லாவிட்டால் இந்த சூழ்நிலை மாற்றத்தை எவ்வாறு புரிந்துகொள்வது? எது மிக அற்புதமாக இருந்ததோ, இப்போது அசிங்கமாக தோன்றுகிறது. எது எதிர்பார்க்க பட்டதோ, இப்போது பயமுறுத்தியது.

ரகசியமாக மரியாளை தள்ளிவிடவேண்டும் என்று யோசேப்பு நினைத்ததினால், யோசேப்பு மரியாளின் கதையை நம்பவில்லை என்று நாம் புரிந்துகொள்ளலாம். ஏமாற்றப்பட்ட ஒரு வாலிபன் காட்டும் மிகவும் அன்பான தெரிந்துகொள்ளுதல். அந்த குழந்தை பிறப்பதற்கு முன் அவள் கள்ளரிய பட அவனால் அனுமதிக்க முடியவில்லை. அவளை திரும்ப பார்க்காத படி அவளை அனுப்பிவிடுவது என்பது யோசேப்பு செய்த மிக பெரிய தியாகம்.

யோசேப்பு தேவன் மீதும் அவன் உலகத்தில் மிகவும் நேசித்த நபர் மீதும் கொண்டிருந்த ஏமாற்றத்தை நம்மால் புரிந்துகொள்ளவே முடியாது. மரியாள் அவன் உலகமாக இருந்தால் ஆனால் இனிமேல் அவளை அவனால் பார்க்கவே முடியாது. அவனுடைய நேச பெண் தன் கற்பை வேறொருவரிடம் இழந்திருப்பாள் என்று யோசேப்பு நினைத்திருப்பானா?

யோசேப்பு இந்த துரோகத்திற்கும் ஏமாற்றத்திற்கும் தகுதியானவன் அல்ல. ஒரு சந்தோஷமும் நம்பிக்கையும் நிறைந்த திருமணத்திற்கு தான் அவன் "தகுதியாய்" இருந்தான்.

இப்போதோ, ஒருவேளை யோசேப்பின் நற்பெயர் நாசரேத்தின் தெருக்களில் கலங்கம் அடைந்திருக்கும், அவனுடைய சிறுவயது நண்பர்களெல்லாம் அவன் முதுகின் பின்னால் கேலி செய்திருப்பார்கள்.

யோசேப்பு மரியாளின் பெற்றோரையும் தன்னுடைய பெற்றோரையும் சந்தித்து இருக்க வேண்டும். அவன் எந்த குற்றத்தையும் செய்யவில்லை என்றாலும், அவர்கள் ஒருவேளை அவனை நம்பாமல் இருந்திருப்பார்கள். இந்த ஏமாற்றப்பட்ட மனம் நொந்த வாலிபனுக்கு பண்டிகை கொண்டாட்ட உணர்வே இல்லாமல் இருந்திருக்கும்.

இந்த வருட கிறிஸ்துமஸ் நாட்களில் நீ மிக அதிக ஏமாற்றத்தை சந்திக்கிறாயா? இந்த ஜீவியத்தின் உண்மைகளின் வலியை இந்த கிறுஸ்துமஸின் எதிர்பார்ப்பு மறக்க உதவ வேண்டும் என்பதே நான் உனக்காக ஏறெடுக்கும் ஜெபமாக இருக்கிறது. உன்னுடைய ஏமாற்றத்தினால் கிருஸ்துமஸ் மறக்கப்பட இடம் கொடுக்காதே. அதற்கு மாறாக உன் ஏமாற்றத்தை கிருஸ்துமஸ் மறக்க செய்யும்படி இடம் கொடு.
நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்