பூமிக்கு பேரானந்தம்! கிறிஸ்துமஸுக்கு ஒரு கவுண்டவுன்மாதிரி

Joy! to Your World! A Countdown to Christmas

25 ல் 3 நாள்

எலிசபெத் வாழ்ந்த நாட்களில், பெண்கள் கர்ப்பந்தரித்து அது வெளிப்படையாகும் போது தனிமையில் நேரத்தை செலவிடுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், வேதத்தின் அடிப்படையில், எலிசபெத் கர்ப்பந்தரித்த உடனேயே தனிமையில் சென்றால் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அந்த நாளின் பழக்கத்திற்கு மாறாக எலிசபெத் ஏன் சீக்கிரமாகவே தன்னை தனிமை படித்திக்கொண்டாள் என்று நான் நினைத்ததுண்டு. தேவனுடைய திட்டத்திற்கு எலிசபெத் தன்னை ஆயத்த படுத்த வேண்டும் என்று யோசித்தாலோ என்று நினைக்கிறன். நன்றியினாலும் ஆச்சரியத்தினாலும் நிறைந்து எலிசபெத் தாய்மைக்காக தன்னை ஆயத்தப்படுத்துவதே வாழ்வின் ஒரே குறிக்கோள் என்று எலிசபெத் நினைத்திருப்பாள் என்று நினைக்கிறன்.

அவளுடைய சுருங்கிப்போன கன்னங்களில் கண்ணீர் வழிந்தோடி அவள், " தேவனே! ஒரு அற்புதம்! எனக்கு நீர் ஒரு தனிப்பட்ட அற்புதத்தை தந்திருக்கிறீர்!" என்று ஜெபித்திருப்பாள்.

வளைந்து முத்திரிந்த விரல்களால் எலிசபெத் சிறிய குழந்தைக்கான துணிகளை தைத்துக்கொண்டு, இருதயத்தில் பிரபஞ்சத்தின் தேவனிடம், "தேவனே, என்னை நீர் ஆயத்த படுத்தும் காரியத்திற்கு என்னை ஆயத்தப்படுத்தும்!" என்று சொல்லியிருப்பாள்.

இந்த அமைதியான, ஆனால் சந்தோஷமான நாட்களில், எலிசபெத் நிச்சயம் நந்திரியோடு நிறைந்த இருதயத்தை கொண்டிருந்திருப்பாள் என்று நான் நம்புகிறேன். ஒரு மிகபெரிய மனிதனின் தாயாக இருப்பதற்கு இந்த நாட்களில் அவளுடைய வாழ்க்கை முறைகளை மாற்றி இருந்திருப்பாள் என்று நான் நம்புகிறேன். அந்த குழந்தை பெரும் நாளுக்காகவும் ஆசீர்வாதத்திற்காகவும் எலிசபெத் தன்னை ஆயத்தப்படுத்தியிருந்திருப்பாள்.

இந்த கிருஸ்துமஸ் தினங்களில், எதற்காக உன் இருதயத்தை நீ ஆயத்தப்படுத்த வேண்டும்? தேவன் உனக்காக தெரிந்தெடுத்த வழியில் உன்னை பொருத்திக்கொள்ள நீ என்ன வாழ்க்கை முறை மாற்றங்களை பெறவேண்டும்? அவருடைய பெரிய வேளைகளுக்கு அழைக்கும் நபர்களை, அவர் எப்போதும் அவர் சமூகத்திற்கு அழைக்கிறார்.

கிருஸ்துமஸ் நம்பிக்கை மற்றும் அற்புதங்களின் காலமாக இருப்பதோடு தேவனுடைய வழிக்காக நம்மை ஆயத்தப்படுத்தும் காலமாகவும் இருக்கிறது. இன்று கொஞ்ச நேரத்தை தேவனுடைய சமூகத்தில் மறைத்துக்கொள்ள நீ தெரிந்தெடுக்க நான் ஜெபிக்கிறேன். மும்முரமாக ஊதாரித்தனமாக இந்த காலத்தில் அவருடைய அன்பில் மூழ்கி அவர் உன் வாழ்வில் கொண்டிருக்கும் நோக்கத்தை அறிந்துகொள்.

நீயும் எலிசபெத்தோடு சேர்ந்து, என்னோடும் சேர்ந்து, "தேவனே, நீர் என்னை ஆயத்தப்படுத்தும் காரியத்திற்கு என்னை ஆயத்தப்படுத்தும்", என்று ஜெபி
நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Joy! to Your World! A Countdown to Christmas

கிறிஸ்துமஸ் என்பது நம்முடைய தூசியான அழுக்கான உலகங்களில் பரலோகம் உள்வரும் நாட்களாக இருக்கும் காலமாகும். கிறிஸ்துமஸ் என்று சொல்லும்போது அற்புதங்கள் இன்னும் நடக்கின்றன என்று நினைவூட்டவும், ஜெபங்கள் உண்மையில் பதிலளிக்கப் படுகின்றன என்றும் பரலோகம் அருகில் இருக்கிறது என்றும் அர்த்தம் கொண்டதாக இருக்கிறது. மரியாள், யோசேப்பு, சகரியா, எலிசபெத், மேய்ப்பர்கள் மற்றும் சாஸ்திரிகள் என்பவர்களுடைய அனுபவங்கள் மூலம் முதல் கிறிஸ்துமஸின் முக்கியத்துவத்தையும் இன்று நம்முடைய ஜீவியங்களில் எவ்வாறு அது கிரியை செய்கிறது என்று தியானிப்போம்.

More

இந்த திட்டத்தை அளித்த கரோல் மக் லீட் மற்றும் ஜஸ்ட் ஜாய் ஊழியங்களுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். மேலும் தகவல் அறிய www.justjoyministries.comக்கு செல்லவும்