பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
நீங்கள் ஜெபத்தைப் பற்றி நினைக்கும் போது, உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது? நீங்கள் ஜெபிக்கும்போது, தேவனிடமிருந்து நீங்கள் என்ன விரும்புகிறீர்கள்? உங்கள் ஜெப வாழ்க்கையில் என்ன கோரிக்கைகள் ஆதிக்கம் செலுத்துகின்றன?
சரணடைதல் மற்றும் கொண்டாட்டத்தின் சந்திப்பில் தான் உண்மையான ஜெபம் நடக்கிறது. ஒரு விருப்பப்பட்டியலை தேவனிடம் ஒப்படைப்பதை விடவும், அவர் இருப்பதற்கும், அவர் நமக்கு வழங்கும் அனைத்திற்கும் நன்றியுணர்வு உள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை அவருக்குத் தெரிவிப்பதை விட ஜெபம் மிகவும் ஆழமானது. இந்த வகையான பிரார்த்தனை உங்களை மையத்தில் நிறுத்துகிறது, உண்மையான வழியில், தேவனை ஒரு தெய்வீக பணியாளராக இந்த வகையான ஜெபம் குறைக்கிறது. இந்த விதமான ஜெபங்களில் நீங்கள் விரும்புவது அவரை அல்ல. அவருடைய ஞானத்தையும் அல்ல. உங்கள் இதயம் ஏங்குகிறது அவருடைய கருணையும் அல்ல. விருப்பப்பட்டியலின் பிரார்த்தனையானது அடிப்படையில் தேவனிடம் இவ்வாறாக நாம் வைக்கும் ஒரு கோரிக்கையாக உள்ளது, "என் வாழ்க்கைக்கு எது சிறந்தது என்று எனக்குத் தெரியும், தேவனே, உங்கள் ஆற்றலைப் பயன்படுத்தி நீங்கள் அதைப் எனக்கு பெற்றுத்தர வேண்டும்."
இவ்வாறான ஜெபத்தை, நாம் தேவனை ஒரு படைப்பாளராகவும் இரட்சகராகவும் மற்றும் நாம் நினைப்பதை விடவும் செய்வதை விடவும் எண்ணற்றதை தேவன் அறிந்திருக்கிறார் என்பதை மறக்கும் தருவாயில் ஜெபிக்கிறோம். ஆனால் அதற்கும் மேலாக, இந்த வகையான ஜெபம் உங்கள் விருப்பங்கள், உங்கள் தேவைகள் மற்றும் உங்கள் உணர்வுகளைப் பற்றிய வாழ்க்கையை உருவாக்குகிறது. இது உண்மையில் பிரார்த்தனை அல்ல. உண்மையான ஜெபத்தில், உங்கள் வாழ்க்கையின் மீதான உங்கள் கூற்றை தேவனின் சிறந்த மற்றும் புத்திசாலித்தனமான திட்டங்களுக்கும் நோக்கங்களுக்கும் ஒப்படைக்கிறீர்கள். அவருடைய விருப்பத்திற்கு உங்கள் விருப்பத்தை நீங்கள் சமர்ப்பிக்கிறீர்கள். உங்கள் பட்டியலில் தேவன் கையெழுத்திடுவது அல்ல ஜெபம், உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படைப்பதே உண்மையான ஜெபம்
இவ்வாறு ஒரு சரணடையும் ஜெபத்தினை நீங்கள் செய்யும் போது அது கொண்டாட்டமாகவே இருக்கும். ஜெபத்தில், நீங்கள் உண்மையில் ஒரு பரலோகத் தகப்பனைக் கொண்டிருக்கிறீர்கள் என்று நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். அவருடைய ராஜ்யத்தை உங்களுக்குக் கொடுக்க அவர் தேர்ந்தெடுத்த யதார்த்தத்தில் நீங்கள் மகிழ்ச்சியைக் காண்கிறீர்கள். உங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அவர் தனது சர்வ வல்லமையுள்ள ஆற்றலை கட்டவிழ்த்து விடுகிறார் என்பதன் மூலம் நீங்கள் ஊக்கப்படுகிறீர்கள். மன்னிப்பிலும், மீட்பிலும், மாற்றத்திலும், இயக்கத்திலும், கிருபையிலும் கொண்டாடுகிறீர்கள். அவரது மீட்பின் வேலையில் உங்களை சேர்த்ததில் மகிழ்ச்சி அடைகிறீர்கள். வரவிருக்கும் உங்களது புகழ்பெற்ற எதிர்காலத்தில் நீங்கள் நம்பிக்கையைக் காண்கிறீர்கள். இம்மானுவேல் அவருடைய அருளால் உங்கள் வாழ்க்கையை ஆக்கிரமித்திருப்பதால், நீங்கள் ஒருபோதும் தனியாக இல்லை என்பதில் நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்கள். கருபை என்பது உங்களது சொந்த ஞானம், நீதி மற்றும் வலிமையின் சிறிய வளங்களில் ஒருபோதும் நீங்கள் தனியே விடப்படுவதில்லை என்பதில் நீங்கள் அமைதியைக் காண்கிறீர்கள். நீங்கள் தேவனின் மகிமையையும் நன்மையையும் தியானித்து, கொண்டாடுவீர்கள். உங்களைச் சுற்றியுள்ள நபர்கள், சூழ்நிலைகள் மற்றும் இருப்பிடங்களில் நீங்கள் இனி வாழ்க்கையைத் தேட வேண்டியதில்லை என்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள், ஏனென்றால் உங்களுக்கு வாழ்க்கை வழங்கப்பட்டுள்ளது- நித்தியமான வாழ்க்கை.
உண்மையான ஜெபத்தில் தேவனிடம் வேண்டுகோள்கள் உள்ளனவா? நிச்சயமாக கோரிக்கைகள் வைக்கலாம். நம்முடைய பாரங்களை அவர்மீது செலுத்த தேவன் நம்மை ஊக்குவிக்கிறார், ஏனென்றால் அவர் நம்மை உண்மையிலேயே கவனித்துக்கொள்கிறார். ஆனால் உண்மையான ஜெபத்தின் கோரிக்கைகள் எப்போதும் சரணடைதல் மற்றும் கொண்டாட்டத்தின் பின்னணியில் இருக்கும். சரணடைதல் மற்றும் கொண்டாட்டம் தான் அந்த கோரிக்கைகளை சுயநல கோரிக்கைகள் அல்லது கசப்பான புகார்கள் என்று வேறுபிரிக்கும். இந்த வகையான பிரார்த்தனை உங்கள் வாழ்க்கையில் தேவனின் கிருபையின் ஒரு கருவியாகும். நீங்கள் தேவனை சரியான இடத்தில் வைத்து, நீங்கள் உங்களை அவரின் குழந்தையாக மாற்றிக்கொள்ள இடம் கொண்டாடும்போது, ஜெபம் உங்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்க தேவன் பயன்படுத்தும் ஒரு கருவியாக மாறுகிறது. இப்போது, அது கிருபை!
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More