பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
பாவமானது இரண்டு குறிப்பிடத்தக்க விஷயங்களைச் செய்கிறது. முதலாவதாக, இது நம் அனைவரையும் நம் உலகங்களின் மையமாக மட்டுப்படுத்துகிறது, நம்மைப் பற்றிய வாழ்க்கையை உருவாக்குவதற்கும் காரணமாகிறது. நம்முடைய சுய-கவனம் முழுவதையும் நம்முடைய விருப்பங்கள், தேவைகள் மற்றும் நம் உணர்வுகளிலேயே செலுத்துகிறோம், மேலும் நாம் இவ்வாறு இருப்பதால், நாம் பெற்ற பல அற்புதமான ஆசீர்வாதங்களைக் காட்டிலும் நம்மிடம் இல்லாததைப் பற்றி நாம் அதிகம் யோசிப்போம். ஆனால் இதனோடு பாவத்தின் செயல் முடிவதில்லை இன்னும் நிறைய இருக்கிறது; நாம் சுய கவனம் செலுத்துவதால், நாம் நம்மை மற்றவர்களுடன் ஒப்பிடுகிறோம். இது அதிருப்தி மற்றும் பொறாமையை நம்மில் விதைக்கிறது. பொறாமை எப்போதும் சுயநலமானது.
பாவம் நமக்குச் செய்யும் இதுபோன்றே சமமான முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாவது விஷயம் இருக்கிறது. இது எப்போதும் செங்குத்தாக மட்டுமே காணக்கூடியதை கிடைமட்டமாக பார்க்க வைக்கிறது. அதாவது மேல்நோக்கி தேவனைப் பார்த்தால் மட்டுமே கிடைக்கும் விஷயங்களுக்கு அவரின் படைப்புகளைப் பார்க்கச் செய்யும். ஆகவே, வாழ்க்கை, நம்பிக்கை, அமைதி, ஓய்வு, மனநிறைவு, அடையாளம், பொருள், நோக்கம், உள் அமைதி மற்றும் தொடர் உந்துதல் ஆகியவற்றிற்காக நாம் படைப்பைப் பார்க்கிறோம். பிரச்சனை என்னவென்றால், படைப்பில் உள்ள எதுவும் நமக்கு இவற்றைக் கொடுக்க முடியாது. நமது இதயத்தை திருப்திப்படுத்தும் வகையில் படைப்பு ஒருபோதும் வடிவமைக்கப்படவில்லை. நமது இதயத்தை திருப்திப்படுத்தும் திறன் இருக்கும் தேவனை நோக்கிப் பார்க்க நமக்கு உணர்த்தும் சுட்டிக்காட்டியாகவே இந்த படைப்புகள் அனைத்தும் உருவாக்கப்பட்டது. பலர் இன்று எழுந்து, ஒருவிதத்தில் படைப்பை தங்கள் இரட்சகராகத் தீர்மானிக்கிறார்கள், அதாவது, தேவனால் மட்டுமே கொடுக்க முடிந்ததை அவர்கள் கொடுப்பார்கள் என்று நம்பி வாழ்வை இழக்கின்றனர்.
"பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை. என் மாம்சமும் என் இருதயமும் மாண்டுபோகிறது; தேவன் என்றென்றைக்கும் என் இருதயத்தின் கன்மலையும் என் பங்குமாயிருக்கிறார்" (சங்கீதம் 73:25-26). மனநிறைவின் ரகசியத்தைக் கற்றுக்கொண்ட ஒரு மனிதனின் வார்த்தைகள் இவைகளே. கொடுப்பவரிடம் நீங்கள் திருப்தி அடையும்போது, நீங்கள் தேடிக்கொண்டிருந்த வாழ்க்கையை அவரிடம் நீங்கள் கண்டறிந்ததால், திருப்திக்கான வெறித்தனமான தேடலில் இருந்து நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள். ஆம், உங்கள் இருதயத்தை நீங்கள் தேவனிடம் ஒப்புக்கொடுத்து ஓய்வெடுக்கும் போது மட்டுமே அது ஓய்வெடுக்கும் என்பது உண்மைதான்.
கிருபையின் மிக அழகான கனிகளில் ஒன்று இங்கே-மனநிறைவு, அதிக நேர ஆராதனை மற்றும் இல்லாததைப்பற்றிய கவலையை விட அதிகமாக கொடுக்கப்பட்டதற்கான நன்றியுணர்வு. கிருபை மட்டுமே இந்த வகையான அமைதியான வாழ்க்கையை நம் ஒவ்வொருவருக்கும் சாத்தியமாக்குகிறது. அந்த கிருபைக்காக நீங்கள் இன்று தேவனைப் தேடமாட்டீர்களா?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More