பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
ஒரு நிமிடம் என்னுடன் இதை யோசித்துப் பாருங்கள். நாம் ஆசீர்வாதத்தின் வாழ்க்கையையா அல்லது புகார் செய்யும் ஒரு வாழ்க்கை வாழ்கிறோமா? நமது வாழ்வில் கறைபடுவது மிகவும் எளிது. தவறு கண்டுபிடிக்க மிகவும் எளிதானது. அதிருப்தி மிகவும் எளிதானது. நாம் மற்றவர்களை விட குறைவாக இருக்கும் விஷயங்களை கண்டுபிடிப்பது மிகவும் எளிதானது. இது எரிச்சலூட்டும் மற்றும் பொறுமையற்றதாக இருக்கும். வாழ்க்கையின் கஷ்டங்களைப் பற்றி பேசுவது மற்றும் மூச்சுவிடுவது அவ்வளவு எளிதானது. இதில் அதிருப்தி அடைவது மிகவும் எளிது.
இவை எல்லாம் ஏன் அவ்வளவு எளிதானது?இவை எளிதாக இருப்பதற்கு ஒரே காரணம், பாவம் இன்னமும் நம்மைப் பற்றியே அல்லது சார்ந்தே எல்லாவற்றையும் செய்ய தூண்டுவதே. பாவம் உண்மையில் சுயநலமாக இருப்பதால், நமது தேவைகளுக்குள்ளும், நமது உணர்ச்சிகளுக்குள்ளுமான சிறிய எல்லைகளுக்கு கீழே நமது உலகங்கள் குறைத்துக்கொள்கிறோம். நாம் உண்மையில் நம் வாழ்வில் நமக்கு கிடைக்கும் நன்மைகளை அளிப்பதற்கு நமக்கு எவ்வளவு தேவையுள்ளதோ அதையே நிறைக்கல் ஆகிறது. இது காலப்போக்கில் தேவனை மறந்து நம்மையே மையப்படுத்தும் வாழ்க்கைக்கு வழிவகுக்கும். நமது உலகின் மையத்தில் நாமே இருந்தால், நமக்கு புகார் செய்வதற்கு நிறைய விஷயங்களைக் காண்போம்.
நமது உலகம் அதின் மக்கள் மற்றும் இங்குள்ள விஷயங்கள் தேவனுடைய சித்தத்தின் படி செயல்படாத ஒரு விழுந்த உலகமாக உள்ளது என்பது உண்மைதான். இந்த உலகம் உண்மையில் மோசமாக உடைந்துவிட்டது. இங்கே வாழ்க்கை உண்மையில் கடினமாக உள்ளது. எல்லா வகையான கஷ்டங்களையும், பெரியது மற்றும் சிறியது எல்லாவற்றையும் நாம் எதிர்கொள்கிறோம். மக்கள் நம்மை ஏமாற்றுகிறார்கள். அவர்கள் நமது வாழ்க்கையை கடினமாக செய்கிறார்கள். தடைகள் நமது வழியில் தோன்றும். சில வழியில், எப்படியோ இந்த உலகின் வீழ்ச்சி ஒவ்வொரு நாளும் நமது வாழ்வின் கதவினுள்ளும் நுழைகிறது. இந்த வீழ்ச்சியுற்ற உலகில் வாழ்க்கையின் கஷ்டங்கள் சுய மையமாகியப் பாவத்தினோடு இனணயும் போது, இது நமது வாழ்க்கையை பேரழிவாகவோ அல்லது குறைந்தபட்சம் ஒரு துன்பகரமான வாழ்க்கையாகவோ மாற்றிவிடுகிறது.
வேதாகமம், புகார் செய்யும் மனப்பான்மைமையும் மற்றும் முணுமுணுப்பையோ ஒரு சிறிய விஷயமாக பார்க்கவில்லை. உபாகமம் 1 இல், மோசே இஸ்ரவேல் மக்கள் எப்படி தங்கள் உயிர்களைப் பற்றி (முணுமுணுத்துக்கொண்டனர்) என்றும் தேவனின் நற்குணம் மற்றும் ஞானத்தைப் பற்றிய அவர்கள் கேள்விகளைப் பற்றியும் விவாதித்தார். தேவனுடைய செய்கைக்கு எதிராக மக்கள் கலகம் செய்தார்கள்; அவர்களது அழைப்பினை மறந்தனர். நமது இருதயத்தின் மகிழ்ச்சி அல்லது புகார் மனநிலையே எப்போதும் தேவனை விசுவாசிப்பதற்கான நமது விருப்பத்தை வடிவமைக்கும்.
தேவனுடைய கிருபையை மறந்துவிட்ச் செய்கிறது புகார் அளிக்கும் மனநிலை. இது அவரது இருப்பை புறக்கணிக்கிறது. இது அவரது வாக்குறுதிகளின் அழகைப் பார்க்கத் தவறச்செய்கிறது. இது அவரது படைப்பின் பிரகாசத்தை பார்க்க இயலாதபடி செய்கிறது. இது அவருடைய நற்குணம், விசுவாசம், அன்பு ஆகியவற்றைக் கேள்விக்குட்படுத்துகிறது. அவருடைய இருப்பையும் நம்மீதான அவருடைய அக்கறையையும் சந்தேகிக்க செய்கிறது. நாம் தேவனையும் மற்றும் நம் வாழ்க்கையின் மீது அவரது கட்டுப்பாட்டை விசுவாசித்தால், நமது முணுமுணுப்புகளும் அவருக்கு எதிரானதே என்று நம்பத்தான் வேண்டும். ஆமாம், புகார் செய்வது மிகவும் எளிது. நம் ஒவ்வொருவருக்கும் நமக்கு கொடுக்கப்பட்ட அன்றாட ஆசீர்வாதங்களை மறப்பது மிகவும் எளிது. நமது இந்த மனநிலைக்கான எதிர் வாதம் இங்கே, எந்தவொரு முணுமுணுப்பும் இல்லாமல், மனப்பூர்வமாக நமக்காக ஜீவனை ஈந்தாரே அவரைவிட நமக்கு யார் வேண்டும் நம் வாழ்வை வாழ கற்றுக் கொடுப்பதற்கு.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More