பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
நாம் அனைவரும் செய்யும் விஷயங்களில் இது மற்றொரு விஷயம். நாம் அனைவரும் தவறான எல்லா இடங்களிலும் வாழ்க்கையைத் தேடுகிறோம். நாம் எப்போதுமே வாழ்க்கையை தேவனை நோக்கிப் பார்க்கும் தருவாயில் மட்டுமே கண்டுபிடிப்போம் என்பதே உண்மை. எப்படியோ, ஏதோ ஒரு வகையில், நாம் அனைவருமே படைக்கப்பட்ட உலகத்தைப் பார்த்து வாழ்க்கையை தேடுகிறோம். நாம் அனைவருமே நம்முடன் "இப்படி - இருந்திருந்தால்" என்ற தனிப்பட்ட பட்டியலை எடுத்துச் செல்கிறோம். "எனக்கு திருமணமாகிவிட்டால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன்." "அந்த வேலையை பெற்றால், நான் திருப்தி அடைவேன்." "நான் அந்த வீட்டை வாங்க முடிந்தால், நான் வேறு ஒன்றை விரும்ப மாட்டேன்." "எனது திருமணம் மட்டும் சிறப்பாக இருந்தால், நான் நன்றாக இருப்பேன்." "எனது குழந்தைகள் மட்டும் சரியாக மாறினால், நான் திருப்தி அடைவேன்." "நான் இந்த ____ ஐ அடைய முடிந்தால், அதற்கு மேல் எதையும் விரும்ப மாட்டேன்." "எனது நிதி மட்டும் நிலையானதாக இருந்தால், நான் புகார் செய்ய மாட்டேன்."
உங்களது “இப்படி இருந்திருந்தால்” பட்டியல் மறுபுறம் நீங்கள் தேடும் வாழ்க்கை, அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் இதயத்தின் நீடித்த மனநிறைவை குறிக்கிறது. சிக்கல் என்னவென்றால், உங்களை நிரப்பாதவற்றிற்காக நீங்கள் தொடர்ந்து பணம் செலவழிப்பதும், உங்களை திருப்திப்படுத்தாததைப் பெறுவதற்கு மிகவும் கடினமாக உழைப்பதும் ஆக முடியும். இது ஒரு பெரிய, பேரழிவு தரும் ஆன்மீக குழப்பம், இது உங்களை மிக அடிமையாகவும், கடனிலும், இன்னும் திருப்தியடையாத இதயத்துடனும் விட்டுவிடுகிறது. ஏன்? ஏனெனில் பூமி ஒருபோதும் உங்களது மீட்பாக இருக்காது. இந்த காட்சிகள், ஒலிகள், இருப்பிடங்கள், அனுபவங்கள் மற்றும் உறவுகள் அனைத்தையும் கொண்ட இந்த இயற்பியல், உருவாக்கப்பட்ட உலகமானது, உங்களது இதய உள்ளடக்கத்தை உருவாக்கும் திறனைக் கொண்டிருக்கவில்லை. இந்த உலகம், தேவானாலே உருவாக்கப்பட்டது. இது உங்களது இதய நிறைவிற்கும் ஓய்விற்கும் சுட்டிக் காட்டும் ஒரே இடம் தேவன். அவரிடம் உள்ள நிதானத்தைக் காணும்போதுதான் நமது இதயம் ஓய்வெடுக்கும்.
இதில் இயேசு இவ்வாறாக சொல்லுகிறார்: "உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப் பிச்சைகொடுங்கள், பழமையாய்ப் போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்து வையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை."(லூக்கா 12:33). இன்று உங்களுக்கு உயிரைக் கொடுக்கும் என்ற நம்பிக்கையில் உங்கள் இதயத்தை எதில் செலுத்துவீர்கள்? இருதய அமைதியை எங்கே தேடுவீர்கள்? உங்களுக்கு நம்பிக்கை, தைரியம் மற்றும் தொடர ஒரு காரணத்தை வழங்க எதை நாடுவீர்கள்? படைப்பாளரால் மட்டுமே உங்களுக்கு வழங்கக்கூடியதைப் பெற முயற்சிக்க நீங்கள் படைப்பில் எங்கு பார்ப்பீர்கள்? உங்கள் ஆவிக்குரிய பசியினை ஒருபோதும் தீர்க்க முடியாத எந்த உலகத்து மன்னாவை இன்று நீங்கள் வாங்குவீர்கள்?
நீங்கள் ஏன் ஏற்கனவே உங்களுக்கு கிறிஸ்துவில் வழங்கப்பட்டதை சிருஷ்டிப்பில் தேட விரும்புகிறீர்கள்? உங்கள் இரட்சகராக இயேசு இருக்கும் போது ஏன் உலகில் உள்ளவர்களில் இரட்சிப்பை தேடுகிறீர்கள்?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More