பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
தேவனின் கிருபையைப் பெற நம்மால் எதுவும் செய்ய முடியாது. இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும். தேவனின் புனித தேவைகளை பூர்த்தி செய்யும் அளவுக்கு நம்மால் ஒருபோதும் நீதியுள்ளவராக இருக்க முடியாது. நமது எண்ணங்கள், ஆசைகள், வார்த்தைகள், தேர்வுகள் மற்றும் செயல்கள் போன்ற எதுவுமே ஒருபோதும் போதுமானதாக இருக்காது. அவை ஏதாவது ஒரு சமயத்தில் தவறி தேவனை கனவீனப் படுத்துவைகளாகவே இருக்கும். உங்களுக்கும் எனக்கும் எப்போதும் அடைய முடியாத அளவுக்கு இந்த பட்டியல் மிக அதிகம். இதற்கு விதிவிலக்குகள் இல்லை. நாம் அனைவரும் ஒரே நியாயப்பரமான எடையை சுமந்துக்கொண்டு மற்றும் பாவத்தினை மேற்கொள்ள முடியாத அதே இயலாமையின் கீழ் வாழ்கிறோம். நாம் அனைவரும் அடிபணிபவர்களாயிராமல் சிறந்த கிளர்ச்சியாளர்களாகவே இருக்கிறோம். நாம் அனைவரும் தாழ்மையை விட இயற்கையாகவே பெருமையை விரும்புகிறோம். தேவனை வணங்குவதை விட நாம் அனைவரும் விக்கிரகாராதனைக்கு அதிகம் நேரம் செவவழிக்கிறோம். அண்டை வீட்டாரை நேசிப்பதை விட அவர்களுடன் போரிடுவதில் சிறப்பாக செயல்படுகிறோம். நாம் அனைவரும் மனநிறைவாய் வாழ்வதைவிட பொறாமையோடு வாழ்கிறோம். நாம் அனைவரும் ஏதோ ஒரு வகையில் திருடர்கள். மற்றவர்களிடம் இருப்பதை நாம் அனைவரும் விரும்புகிறோம். சத்தியத்தை பாதுகாப்பதை விட இயல்பாகவே அதை நம் தேவைக்கேற்ப வளைத்து பேசுகிறோம். நமது வார்த்தைகளால் ஆசீர்வாதங்கள் சொல்வதை விட கண்டிக்கிறோம். நாம் ஒருபோதும் நாமாக நமது சுதந்திரத்தில் தேவனின் தரத்தை என்றுமே எட்ட முடியாது என்பதற்கான ஆதாரங்களாக ஒவ்வொரு நாளும் வாழ்கிறோம்.
இதோ இங்கே " அனைத்தையும் விளக்கும் வசனம்”: “எந்த மனுஷனும் நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினாலே தேவனுக்கு முன்பாக நீதிமானாக்கப்படுவதில்லை" (ரோமர் 3:20)இது ஏனென்றால் “எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;"( ரோமர் 3:23). எல்லா மக்களும் தங்கள் இதயங்களிலும், அவர்களின் அடையாளத்தின் உணர்விலும் ஏற்றுக்கொள்ள வேண்டிய தாழ்மையான செய்தி இது. ஆனாலும் ஏற்றுக்கொள்ள கடினமான இந்த செய்தி மனச்சோர்வடைந்து சுய வெறுப்புக்கு அல்ல, இச்செய்தியானது நித்தியம், நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சிக்கான வாசல். நாம் யார், நம்மால் என்ன செய்ய முடியவில்லை என்பதை நாம் ஏற்றுக் கொள்ளும்போது தான் தேவனின் பரிசின் அவசியத்தை நாம் புரிந்துகொள்ளத் தொடங்குகிறோம். ரோமர் 3-ல் பவுல் சொல்வது போல் கெட்ட செய்திகளையும் நற்செய்தியையும் ஒன்றாக இணைப்போம். அவர் எழுதுகிறார், “அனைவரும் பாவம் செய்து தேவ மகிமை அற்றவர்களானார்கள்”, ஆனால் அது கதையின் முடிவு அல்ல. அவர் தொடர்ந்து கூறுகிறார், “தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக்குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், தாம் நீதியுள்ளவரும், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை நீதிமானாக்குகிறவருமாய் விளங்கும்படி, இக்காலத்திலே தமது நீதியைக் காண்பிக்கும் பொருட்டாகவும்,கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் கிருபாதாரபலியாக அவரையே ஏற்படுத்தினார்" ( ரோமர் 3:23-25 ).
நமது பாவத்திற்கான பரிகாரம் அல்லது பிராயச்சித்தம் தியாகமே. இயேசுவின் தியாகம் தேவனின் கோபத்தைத் தணித்து, தேவனுக்கும் அவர்மீது நம்பிக்கை வைத்த அனைவருக்கும் இடையே ஒரு நல்லிணக்கத்தை உருவாக்கியது. தேவன் பாவத்தை வெறுக்கிறார் என்பதால், பாவிகளான நாம் அவருடன் உறவு கொள்ள ஒரே வழி, நம்முடைய பாவத்திற்கான தண்டனையை செலுத்த கிறிஸ்து தனது உயிரைக் கொடுப்பதே. தேவனின் தயவைப் பெற நீங்கள் கீழ்ப்படியத் தேவையில்லை. கிறிஸ்து உங்கள் சார்பாக தேவனின் தயவைப் பெற்றுள்ளார். ஆகவே, தேவனுக்கான நமது கீழ்ப்படிதல் ஒருபோதும் பயமுறுத்தும் அனுபவமாக இல்லாமல், நாம் இருந்த இடத்திலேயே நம்மை சந்தித்து, நமக்காக நம்மால் செய்ய முடியாததை செய்த தேவனுக்கு நன்றி செலுத்தி அவரை ஆராதிப்பதே நமது கீழ்படிதல்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More