பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
நான் எப்போதும் போதும் என்ற மனதுடன் இருக்கிறேன் என சொல்ல விரும்புகிறேன். நான் புகார் செய்யவில்லை என்று நான் சொல்ல விரும்புகிறேன். நான் மற்றவர்களிடம் இருப்பது எனக்கு வேண்டாம் என்று சொல்ல விரும்பவில்லை என்று நான் விரும்புகிறேன். நான் வேறொருவரின் வாழ்க்கையை பார்த்து ஒருபோதும் பொறாமைபட்டதில்லை என்று சொல்ல விரும்புகிறேன். தேவன் எனக்கு தரவேண்டியதை வேறு ஒருவருக்கு கொடுத்துவிட்டார் என்று சொல்லாதிருக்க விரும்புகிறேன். நான் என்னிடத்தில் இல்லாததை மதிப்பிடுவதை விட என் ஆசீர்வாதங்களை எண்ணிப் பார்க்கிறேன் என்று நான் சொல்ல விரும்புகிறேன். என்னிடம் தேவைக்கான பசி அதிகம் இல்லை என்று சொல்ல விரும்புகிறேன். என் இதயம் இறுதியாக திருப்தியாக இருக்க விரும்புகிறேன்.
இவைகள் அனைத்தும் இன்னும் முழுமையாக உண்மை இல்லை, இது அனைத்து விருப்பங்களாகவே உள்ளன. பொறாமை இன்னும் என் இதயத்தில் பதுங்குகிறது. அது இன்னும் அங்கு வசிப்பது பாவத்தின் இருண்ட விளைவுகளில் ஒன்றாகும். பொறாமைக்கு எதிராக வேதாகமம் ஏன் வலுவாக பேசுகிறது? அதன் பதில் இங்கே: பொறாமை நமது இதயத்தில் இருக்கும் போது, தேவனின் அன்பு அங்கே இருக்காது. பொறாமை என்ன செய்யும் என்று சிந்திப்போம். நமக்கு தகுதி இல்லாதிருந்தும் ஆசீர்வாதங்களைப் பெற நாம் தகுதி உடையவர் என வஞ்சிக்கும். நமது இதயம் பொறாமையால் ஆளப்படும் போது, "நான் ஆசீர்வதிக்கப்பட்டவன்" என்னும் மனப்பான்மை மாறி "நான் தகுதியுடையவன்" என்னும் மனப்பான்மையுடன் பதிலளிப்போம். பொறாமையின் மையமே சுயநலமாகும். பொறாமை எப்போதும் உலகின் மையத்தில் உங்களை வைக்கும். இது எல்லாவற்றையும் உங்களைப் பற்றியே சிந்திக்கச் செய்கிறது. இது உங்களது தேவைகள் மற்றும் உணர்வுகள் ஆகியவற்றின் ஒரே முன்னோக்கிலிருந்து வாழ்க்கையை ஆராய்வதற்கு உங்களை தூண்டுகிறது.
துரதிருஷ்டவசமாக, பொறாமையானது, தேவனின் நன்மையும், உண்மையும், ஞானத்தையும் கேள்விக்குறிக்குள்ளாக்குகிறது. அதுமட்டுமல்லாமல் தேவன் என்ன செய்கிறார் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை என்றும் அவர் கொடுத்த வாக்குறுதியில் அவர் உண்மையுள்ளவராக இல்லை என்றும் குற்றம் சாட்டும். இன்னொரு நபரிடம் உங்களுக்கான ஆசீர்வாதத்தை நீங்கள் காணும் போது அந்த நபருடன் ஒரு பிரச்சனையும் இல்லை, நமக்கு தேவனிடம் பிரச்சனை ஏற்படுகிறது. தேவனுடைய நற்குணத்தை நீங்கள் கேள்விக்கேட்க்க தொடங்குவீர்கள், பின்பு நீங்கள் உதவிக்காக அவரை நோக்கி போக மாட்டீர்கள். ஏன்? உங்களுக்கு சந்தேகம் வந்த பின் எப்படி அவரின் உதவியை நீங்கள் எப்படி தேடுவீர்கள்.
பொறாமை ஆவிக்குரிய ஜீவியத்திற்கு ஆபத்தானது. அளவிடமுடியாத வகையில் ஒரு தவறான புரிந்து கொள்ளுதலை வைத்திருக்கும். பொறாமையானது நாம் மற்ற நபரின் வாழ்க்கையை பற்றி நன்கு தெரிந்துகொண்டுள்ளோம் என்றும், தேவன் அறிந்ததை விட நம் வாழ்க்கைக்கு சிறந்ததைப் பற்றிய ஒரு தெளிவான புரிதல் நமக்கே இருப்பதாகவும் வஞ்சிக்கும். மேலும், பொறாமையானது நமக்கு தேவன் அளித்த அற்புதமான மீட்பு, மாற்றியமைப்பு, அதிகாரம், மற்றும் கிருபை ஆகியவற்றை மறக்கச்செய்கிறது. நாம் பெற்றிருக்கவும், நம்மால் சம்பாதித்திருக்கவும் முடியாத தேவனுடைய கிருபையுடைய மகத்தான ஆசீர்வாதங்களை இது மறக்கச் செய்கிறது. அதுமட்டுமின்றி தேவனுடைய கட்டளைகளுக்கும் எச்சரிக்கைகளுக்கும் கவனத்தை செலுத்துவதையும் தவிர்க்கிறது. பொறாமைக்கான ஒரே தீர்வு தேவனுடைய கிருபையுடைய மீட்பு- தன்னலம் வாய்ந்த பாவிகளை சந்தோஷமும் நிறைவுமான ஆராதனை வீரர்களாக மாற்றும் அந்த கிருபை.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More