பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி

Paul Tripp's Daily Thanksgiving Devotional

12 ல் 11 நாள்

நமது உறவுகளுக்கிடையே உள்ள மிகப்பெரிய பாவங்களில் ஒன்று மறதியின் பாவம் என்பது தான் உண்மை. இயேசுவின் பின்வரும் உவமையைக் கவனியுங்கள்:

எப்படியெனில், பரலோகராஜ்யம் தன் ஊழியக்காரரிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவுக்கு ஒப்பாயிருக்கிறது. அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பதினாயிரம் தாலந்து கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள். கடனைத்தீர்க்க அவனுக்கு நிர்வாகம் இல்லாதபடியால், அவனுடைய ஆண்டவன் அவனையும் அவன் பெண்ஜாதி பிள்ளைகளையும், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, கடனைத் தீர்க்கும்படிக் கட்டளையிட்டான். அப்பொழுது, அந்த ஊழியக்காரன் தாழவிழுந்து வணங்கி: ஆண்டவனே! என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்றான். அந்த ஊழியக்காரனுடைய ஆண்டவன் மனதிரங்கி, அவனை விடுதலைபண்ணி, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான். அப்படியிருக்க, அந்த ஊழியக்காரன் புறப்பட்டுப்போகையில், தன்னிடத்தில் நூறு வெள்ளிப்பணம் கடன்பட்டிருந்தவனாகிய தன் உடன்வேலைக்காரரில் ஒருவனைக் கண்டு, அவனைப் பிடித்து, தொண்டையை நெரித்து: நீ பட்ட கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான். அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாயிரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான். அவனோ சம்மதியாமல், போய், அவன் பட்ட கடனைக் கொடுத்துத் தீர்க்குமளவும் அவனைக் காவலில் போடுவித்தான். நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர் கண்டு, மிகவும் துக்கப்பட்டு, ஆண்டவனிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள். அப்பொழுது அவனுடைய ஆண்டவன் அவனை அழைப்பித்து: பொல்லாத ஊழியக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன். நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி, அவனுடைய ஆண்டவன் கோபமடைந்து, அவன் பட்ட கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத் தீர்க்குமளவும் உபாதிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.(மத்தேயு 18:23‭-‬33)

நாம் அனைவருமே மிகவும் மறதியுள்ளவர்களாக இருக்கலாம். நம்மீது பொழியப்பட்டிருக்கும் அன்பின் மற்றும் கருணையின் மகத்துவத்தை நாம் அனைவரும் நினைவில் கொள்ளத் தவறலாம். தேவனுடைய கிருபையே அல்லாமல் நம் வாழ்வில் மிகச் சிறந்த விஷயங்களை நாம் சம்பாதித்தையோ தகுதியை அடைந்ததையும் நாம் மறக்கலாம். இங்கே தான் சிக்கல் ஆரம்பிக்கிறது: நமக்கு வழங்கப்பட்ட கிருபையை நாம் மறந்துவிட்டால், அதே அளவிற்கு மற்றவர்களுக்கு கருனைக்காட்டாமல் இருப்பது நமக்கு எளிதாகிவிடுகிறது. நாம் எவ்வளவு மன்னிக்கப்பட்டோம் என்பதை நாம் மறந்துவிட்டால், அதே அளவிற்கு நமது வாழ்க்கையில் மக்களை மன்னிக்காதிருக்கிறது நமக்கு எளிதாகிறது. நமக்கு மிகவும் சுதந்திரமாக வழங்கப்பட்ட அன்பின் நன்றியுணர்வை நம்முடன் எடுத்துச் செல்லத் தவறினால், நாம் விரும்பும் விதத்தில் மற்றவர்களை நேசிக்காதிருப்பதும் நமக்கு எளிதாகிறது.

தனக்குத் தேவை இருப்பதை ஆழமாக உணர்ந்த ஒரு நபரை விட யாராலும் கருணையை சிறப்பாக வழங்கமுடியாது என்பதும், அது கனிவான கருணையுள்ள தேவனால் நமக்கு தயவுசெய்து அளவுக்கு அதிகமாக வழங்கப்பட்டுள்ளது என்பதும் எப்போதும் உண்மை. நாம் ஒருபோதும் சம்பாதிக்க முடியாததை அவர் தருகிறார்; அப்படியானால், நாம் எந்த தரத்தை வைத்து மற்றவர்களை மன்னிக்க அளவிட்டு அந்த மன்னிப்பை வழங்க கொடுக்க மறுக்கிறோம்? மன்னிப்பதற்கான அழைப்பு உடனடியாக மன்னிப்பதற்கான நமது தேவையை அம்பலப்படுத்துகிறது. கிருபைக்கான அழைப்பு நமக்கு எவ்வளவு கிருபை தேவை என்பதை வெளிப்படுத்துகிறது. மன்னிப்பதற்கான அழைப்பு அதே நேரத்தில் நினைவில் கொள்வதற்கும் நன்றி செலுத்துவதற்கும் ஒரு அழைப்பு. நீங்கள் எவ்வளவு தூரம் வீழ்ச்சியடைகிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளும்போது, ​​குறைந்துபோகும் மற்றவர்களிடம் நீங்கள் கனிவாக இருக்கிறீர்கள், அவர்களுக்கும் உங்கள் ஒரே நம்பிக்கையான அதே கிருபையை நீங்கள் வழங்குவீர்கள். நினைவில் கொள்வதற்கான கிருபையையும், நமக்கு வழங்கப்பட்டதை மற்றவர்களுக்குக் கொடுக்க விருப்பத்தையும் தேவன் நமக்குக் கொடுப்பாராக.

வேதவசனங்கள்

நாள் 10நாள் 12

இந்த திட்டத்தைப் பற்றி

Paul Tripp's Daily Thanksgiving Devotional

நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Crosswayக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.crossway.org/books/new-morning-mercies-hcj/ ஐ பார்வையிடுங்கள்