பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி

Paul Tripp's Daily Thanksgiving Devotional

12 ல் 9 நாள்

உண்மையான அன்பின் குணாதிசயங்களாகிய ​​“உண்மை, தாழ்மை, மகிழ்ச்சி, விடாமுயற்சி” ஆகியவற்றை நான் எழுதியபோது, என் மனதில் சோகம் நிறைந்தது. இது என்னவென்றால், "என் அன்பு பெரும்பாலும் உண்மையாக இருக்கத் தவறிவிடுகிறது." அதற்காக நான் போலியாக இருப்பதாக அர்த்தமல்ல. நான் இங்கே பாசாங்குத்தனமாக யோசிக்கவில்லை “நான் அன்பாக இல்லையென்றாலும் அன்பாக இருக்கிக்கிறேன்”. இங்கே உண்மை என்பது "நேராக" என்று பொருள், ஒரு வீரர் தனது வில்லில் இருந்து வெளியேறும் அம்பினை உறுதிசெய்கிறார். அவர் முற்றிலும் நேரான அம்புக்குறியை விரும்புகிறார், அதனால் அது வில்லை விட்டு வெளியேறும்போது, ​​அது தவறான திசையில் செல்லாது. இங்கே உண்மை என்பது நிலையான, நம்பகமான மற்றும் சில அன்பற்ற திசையில் செல்லாததை குறிக்கிறது. துரதிர்ஷ்டவசமாக, என் அன்பில் இன்னும் முரண்பாடு உள்ளது. யாராவது என்னுடன் உடன்படாதபோதோ, ​​யாரோ ஒருவர் எனது திட்டத்தின் வழியில் வரும்போதோ, ​​நான் எதிர்பாராத காத்திருப்புக்குத் தள்ளப்படும்போதோ, ​​அல்லது நான் தகுதியானவனாக இருக்கும் தருவாயில் நான் பெற விரும்பும் ஒன்றை யாராவது பெறும்போதோ, ​​அன்பைக் காட்ட தயங்கவே செய்கிறேன்.

இரண்டாவது குணாதிசயமான, தாழ்மையானது, நான் ஏன் இப்படி பதிலளிக்கிறேன் என்பதை விளக்குகிறது. எனக்கு இன்னும் பணிவு இல்லை. எனது திட்டம், எனது உணர்வுகள், எனது ஆசைகள் மற்றும் எனது எதிர்பார்ப்புகளைக் கொண்டே நான் இன்னும் எனது வாழ்க்கையை வாழ முனைகிறேன். ஒரு நாளின் "நல்லதை" மதிப்பிடுவதற்கு நான் தேவனை இதன் மூலமாக பிரியப்படுத்தினேனா, மற்றவர்களிடம் அன்பாக இருக்கிறேனா போன்றவற்றை யோசிக்காமல் இதற்கு எதிராக எனக்கு மகிழ்ச்சி அளித்ததா, நான் இன்னும் ஆசைப்படுகிறேனா என்றே யோசிக்கிறேன். நான் இன்னும் என் வாழ்க்கையை எனக்கு சொந்தமானது போல் வாழ ஆசைப்படுகிறேன், நான் ஒரு விலைக்கு கொள்ளப்பட்டேன் என்பதை நினைவில் கொள்ளத் தவறிவிட்டேன். அதாவது இயேசுவின் இரத்தமே அந்த விலை. இவை அனைத்தும் மூன்றாவது குணாதிசயமான மகிழ்ச்சியைக் காட்டிலும் அன்பை சுமையாக ஆக்குகின்றன. நீங்கள் உங்களுக்காக வாழும்போது, ​​மற்றவர்களை நேசிப்பதற்கான அழைப்பு எப்போதும் உங்களுக்கு ஒரு சுமையாக இருக்கும் என்பது உண்மைதான்.

இறுதி குணாதிசயமான அன்பை விட மிக உயர்ந்த மற்றும் கடினமான தரத்தை சுட்டிக்காட்டுகிறது: விடாமுயற்சி. உண்மையற்ற அன்பு சிறிய மதிப்புடைய அன்பு. காற்றோடு மாறும் காதல் உண்மையில் காதல் அல்ல. இது ஒரு சிக்கலான மற்றும் தற்காலிகமானது ஆகும், இது நம்மிடையே நல்லது செய்வதை விட அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது. அதனால்தான் தேவனின் உண்மையுள்ள, நித்திய அன்பு நமக்கு பெரிய மற்றும் ஊக்கமளிக்கும் ஆறுதல்.

இப்போது இங்கே கேள்வி என்னவென்றால், "உலகில் நான் இந்த வகையான அன்பை எங்கே பெறப்போகிறேன்?" நல்லது, உங்களை நீங்களே ஒருபோதும் அழைத்து, சிறப்பாகச் செய்யப் போகிறீர்கள் என்று சொல்வதினால் ஒருபோதும் நீங்கள் இவ்வகையான அன்பை கண்டடைய முடியாது. இந்த வகையான சுய சீர்திருத்தத்திற்கான சக்தி உங்களுக்கு இருந்திருந்தால், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் அவசியமே இல்லை. என் மீதான சுய-மையப்படுத்தப்பட்ட எனது அன்பாகிய அடிமைத்தனத்திலிருந்து நான் தப்பித்து, உண்மையில் மற்றவர்களை நேசிக்கத் தொடங்குவதற்கான ஒரே வழி, மன்னிப்பதும், விடுவிப்பதும், அதிகாரம் அளிப்பதும், நித்திய அன்பும் கொள்வதே. தேவனுடைய அன்பிற்கு நான் எவ்வளவு நன்றியுள்ளவனாக இருக்கிறேனோ, அதை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவரின் அன்பு, விருப்பத்துடன் கொடுக்கப்பட்டதால், என்னாலும் அன்பைப் பெற முடியும் என்ற ஒரே நம்பிக்கையை நான் மகிழ்ச்சியுடன் மற்றவர்களுக்கும் தருகிறேன்.

வேதவசனங்கள்

நாள் 8நாள் 10

இந்த திட்டத்தைப் பற்றி

Paul Tripp's Daily Thanksgiving Devotional

நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Crosswayக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.crossway.org/books/new-morning-mercies-hcj/ ஐ பார்வையிடுங்கள்