பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி

Paul Tripp's Daily Thanksgiving Devotional

12 ல் 5 நாள்

இது நமது இறையியல் வெளிப்பாடுகளில் ஒவ்வொன்றிலும் ஒரு உருப்படியாகும், ஆனால் நாம் உண்மையில் இதை விசுவாசியார் போல் தான் வாழ்கிறோம்கிறோம். நாம் எல்லோருமே முடிவுக்கு பிறகும் வாழ்க்கை இருப்பதாக நம்புகிறோம். நமது முறையான இறையியலில் ஒரு புதிய பரலோகம் மற்றும் ஒரு புதிய பூமியின் உண்மை உள்ளது. ஆனால் நாம் இந்த இருக்கும் தருணத்தை நினைக்கும் நேரத்தில் கவலையுற்று சோர்ந்து வாழ்கிறோம்.

இங்கே உண்மையான வாழ்க்கையின், தெரு நிலை பிரச்சினை: நமது இதயத்தின் கண்கள் முன் வரவிருக்கும் பரலோகத்தின் கவனம் வரவில்லையென்றால், இந்த ஏழை வீழ்ச்சியுறும் உலகத்தை ஒரு பரலோகமாக மாற்ற முயற்சிப்போம் அது என்றுமே நிறைவேற்ற முடியாத ஒன்றாகவே இருக்கும். ஒவ்வொரு உயிரினத்தின் இதயமும் பரதீஸுக்கு ஏங்குகிறது. கீழே விழுந்த ஒரு குறுநடை போடும் குழந்தையின் அழுகை பரலோகத்திற்காக ஏங்கும் ஒரு அழுகை.விளையாட்டு மைதானத்தில் நிராகரிக்கப்பட்ட ஒரு மாணவனின் கண்ணீர், பரதீஸுக்காக ஏங்கும் கண்ணீர். நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் இல்லாத ஒரு நபர் தன்னுடைய தனிமையில் உணரும் வலி பரலோகத்திற்கான ஏக்க வலி. தம்பதிகள் தங்கள் திருமணம் உடையும் போது விடும் கண்ணீர் பரதீஸுக்கான காயம். முதியவர் உடல் பலவீனமாக இருப்பதால் படும் துயரம் பரலோகத்திற்கான துயரம். நம் அனைவருக்கும் இந்த ஏக்கங்கள் இருந்தும் கூட, அது பற்றி எச்சரிக்கையாக இல்லை. இவ்வலிகள் நம் படைப்பாளரால் நமக்குள் வைக்கப்பட்டது. நம்முடைய இதயங்களில் ஒவ்வொருவரிலும் நித்தியத்தை உணர்த்தவே இதை வைத்துள்ளார் ( பிரசங்கி 3:11). நம் அழுகையானது வலியின் அழுகையை விட மேலானது; இந்த வீழ்ச்சியுற்ற உலகில் நாம் அனுபவிப்பதை விடவும், இன்னும் சிறப்பாக இருப்பதற்க்காக அனைவரும் அழுகின்றனர்.

நாம் இதை மறக்கும் தருவாயில், ஒருபோதும் மாற்ற முடியாததை மாற்ற நாம் மிகவும் கடினமாக உழைப்போம். நமது திருமணம் ஒரு பரதீஸாக இருக்காது. நமது வேலை நமக்கு நீண்டகாலமாக இருக்கும் பரதீஸாக இருக்காது. நமது நட்புகள் நாம் விரும்பும் பரதீஸாக நமக்கு இருக்காது. நப்மை சுற்றியுள்ள உலகம் பரதீஸைப் போல் செயல்படாது. நமது பிள்ளைகள் நமக்கு பரதீஸை வழங்க மாட்டார்கள். நமது தேவாலயம் கூட பரலோகத்தின் தரநிலைக்கு வாழாது. நாம் தேவனின் குழந்தையாக வாழ முற்பட்டால், பரலோகம் நமக்கு உத்தரவாதமாக அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அது இப்போது இங்கே இருக்காது. இப்போது நாம் அடையும் ஏமாற்றம் எல்லாம் நமக்கு பின் கிடைக்கப் போகும் பரலோகத்தை நினைவுபடுத்துவற்கே. கலையும் கனவுகள், உதிரும் பூக்கள், நம்மை பாவம் செய்ய தூண்டும் காரியங்கள், நம்மை தொற்றும் நோய்கள் அனைத்துமே இது பரதீஸாக இல்லை என்பதை நினைவுபடுத்துகின்றன. பரதீஸ் நிச்சயம் வரும் என்பதால் நம்பிக்கையில் வாழ்கின்றோம், மேலும் இந்த வீழ்ச்சியுற்ற உலகைக் நாம், பரதீஸாக இருக்க கேட்காமல் வாழ்வோம் ஏனென்றால் இது என்றுமே அவ்வாறு இருக்க முடியாது.

வேதவசனங்கள்

நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Paul Tripp's Daily Thanksgiving Devotional

நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.

More

இந்தத் திட்டத்தை வழங்கிய Crosswayக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு https://www.crossway.org/books/new-morning-mercies-hcj/ ஐ பார்வையிடுங்கள்