பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
நாம் அனைவருமே இதை ஒவ்வொரு நாளும் செய்கிறோம். ஆனால் நாம் இதை செய்கிறோம் என்று நமக்கு தெரியாது, இன்னும் நாம் நம்மை பார்க்கும் விதத்தில் ஒரு பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்துகிறது மற்றும் நாம் மற்றவர்களுக்கு பதிலளிப்பதையும் இதுவே வடிவமைக்கிறது. தேவனின் சபைகளில் கூட மிகவும் தொடர்புடைய சிக்கலைக் கொண்டிருப்பதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும். நாம் அனைவரும் நினைக்க மறக்கும் இது என்ன?.
வேலைகள் மற்றும் தன்னலம் நிறைந்த நமது வாழ்க்கையில், நம்மீதான தேவனுடைய கிருபையையும் அவர் நமக்கு அளித்துள்ள ஆசீர்வாதத்தையும் மறந்துவிடுகிறோம். அதுமட்டுமின்றி நாம் தேவனுடைய கோபத்துக்கு பாத்திரராய் இருந்தும் அவர் நம்மை ஆசீர்வதித்துள்ளதையும் மறந்துவிடுகிறோம். ஒவ்வொரு காலையும் புதிய கிருபையினால் நமது நாளினை நிறைந்த தேவனை மறுக்கிறோம். ஒரு நாளின் முடிவில் சோர்வுற்று வீடு திரும்பும் போது, தேவையான தூக்கத்தினோடான நாள் முடிவில், தேவனுடைய கைகளில் இருந்து நமது சிறிய வாழ்விற்காக பெறப்பட்ட பல இரக்கங்களைப் பற்றிக் நினைவில் கொள்ள தவறிவிட்டோம். நமது வாழ்க்கையில் கிருபையானது நம் ஒவ்வொருவருடைய தனிப்பட்ட கதைகளிலும் எழுதப்படவில்லை என்றால் எமது வாழ்க்கை என்னவாயிருக்கும் என்பதை சற்று உட்கொள்வதற்கும், தியானிப்பதற்கும் நாம் நேரத்தை செலவிடுவதில்லை. துரதிருஷ்டவசமாக, நாம் அனைவரும் மிகவும் கிருபை-மறதிகளாக இருக்கிறோம். கிருபை-மறதி ஆபத்தானது, ஏனென்றால் நம்மைப் பற்றியும் மற்றவர்களைப் பற்றியும் உள்ள நம்முடைய சிந்தையை இது மாற்றிவிடுகிறது.
நாம் பெறும் கிருபையை நினைவில் வைத்துக் கொள்ளும்போது, நாம் ஒன்றுமே செய்யாமல் மற்றும் நம்மால் பெற முடியாதவற்றை கிருபை நமக்கு அளித்துள்ள தை நினைவில் கொள்ளுவோம். நாம் கிருபையை நினைவில் கொள்ளும் போது, தாழ்மையுள்ளவர்களாக, நன்றியுணர்வுள்ள்வர்களாக, மற்றும் மென்மையானவர்களாக மாறிவிடுவோம். இவ்வாறு நாம் மாறும் போது நம்மிடம் இருக்கும் குறை கூறும் தன்மை நன்றி அறிக்கைகளாகவும் மற்றும் தன்னலம் ஆராதனையாகவும் மாறுகிறது. ஆனால் நாம் தேவனுடைய கிருபையை மறந்துவிட்டாலோ, பெருமையுடன் நாம் பெற்றது நம்முடைய உழைப்பே என்று சொல்லிக்கொள்ளுவோம். அதுமட்டுமின்றி கிருபையினால் பெறக்கூடிய விஷயங்களுக்கும் நாம் பெருமை தேடுவோம் மற்றும் நம்மை நீதியுள்ளவர்களாகவும் தகுதியுடையவராகவும் நினைத்துக்கொண்டு, நமக்கு உரிமையுண்டு போல் வாழ்வோம்.
என்று நாம் கிருபையை மறந்துவிட்டு, தகுதியுடையவராக இருப்பதாக நினைக்கிறோமோ, மற்றவர்களுக்கு இரக்கம் காட்டாமல் இருப்பது மிகவும் எளிதானதாக இருக்கக்காணலாம். பெருமையுடன், நமக்குள்ள தகுதிக்காக நாம் இதை பெற்றோம் என்று நினைக்கிறோம், அதே போல் மற்றவருக்கும் அப்படியே என்று தீர்க்கிறோம். நமது பெருமை கொண்ட இதயம் மென்மையாக இல்லை, எனவே அது மற்றவர்கள் மன்னிப்பு கோரும் சமயத்தில் எளிதில் இரக்கப்படவில்லை. நமது தேவையற்றாத இருக்கிறார் என்று நினைக்கும் சகோதரனைப் போலல்லாவே நாமும் தேவனுக்கு முன்பாக இருப்பதை மறந்துவிட்டோம். பணிவு என்னும் மண்ணில் தான் மற்றவர்களுக்கு உதவும் பண்புகள் வளரும். கிருபைக்கான நன்றியுணர்வு தான் அதிக கிருபை பெற ஊக்குவிக்கும். பவுல் இவ்விதமாக சொல்கிறார், "ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்" (எபேசியர் 4:32).
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More