பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
நீங்களும் நானும் இதை மீண்டும் மீண்டும் நமக்குள் சொல்ல வேண்டும். நாம் கண்ணாடியில் பார்த்து நமது காலை வழக்கத்தின் ஒரு பகுதியாக இதை செய்ய வேண்டும். நாம் அனைவரும் சொல்ல வேண்டியது இங்கே: “நான் கிருபையின் பட்டதாரி அல்ல.” நமது சொந்த நீதிக்கான வாதங்களை முன்வைக்க கீழ் சொல்லப்படும் காரியங்கள் நம்மை மிகவும் தூண்டுகிறது:
“அது உண்மையில் இச்சை அல்ல. நான் அழகை ரசிக்கும் ஒரு மனிதன்."
“அது உண்மையில் வதந்திகள் அல்ல. இது மிகவும் விரிவான, தனிப்பட்ட ஜெப விண்ணப்பம் மட்டுமே.”
“நான் என் குழந்தைகள் மீது கோபப்படவில்லை. நான் தேவனின்வேலையாட்களின் ஒருவராக நடந்து கொண்டிருக்கிறேன். ‘இவ்வாறு தேவன் சொல்கிறார். . . ’”
"நான் தனிப்பட்ட சக்திக்கு ஒரு அசிங்கமான தேடலில் இல்லை. நான் தேவனால் கொடுக்கப்பட்ட தலைமை பதவியை பிரயோகிக்கிறேன்."
"நான் கடின மனதுடன் மற்றும் கஞ்சனாக இல்லை. நான் தேவன் எனக்கு என்ன கொடுக்கிறதைப்பற்றி ஒரு நல்ல காரியக்காரனாக இருக்க முயற்சி செய்கிறேன்."
"நான் பெருமையாக பேசவில்லை. உரையாடலின் கட்டுப்பாட்டை எடுப்பதற்கு யாராவது தேவை என்று நான் நினைத்தேன்."
"இது உண்மையில் ஒரு பொய் அல்ல. இது உண்மைகளை நினைவுபடுத்தும் ஒரு வித்தியாசமான வழி."
நம் அனைவருமே உண்மையில் நாம் இருப்பதைவிட மிகவும் நல்லவர் என்று சொல்லப்படுவதை விரும்புகிறோம். ஆனால் தேவனுடைய மீட்புக்கும் கிருபைக்கும் இன்னமும் இன்னும் தீவிரமாக நாடிக் கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்க விரும்பவில்லை. மற்றும் நாம் நம்மிடம் இருந்து மட்டுமே மீட்கப்பட வேண்டிய உண்மையை நாம் சிந்திக்க விரும்பவில்லை! நமது சொந்த நீதியைப் பற்றி நாம் வாதிடுகையில், நமது பாவத்தின் அனுபவ ஆதாரங்களை மறுக்க கடினமாக உழைக்கிறோம், நமது ஒரே நம்பிக்கையான ஆச்சரியமான கிருபையை நாம் தேட தவறிவிட்டோம். பாவிகளுக்கு மட்டுமே கிருபை கவர்ச்சிகரமாக இருக்கும். தேவனுடைய நற்குணத்தின் செல்வத்தை ஏழைகளால் மட்டுமே பெற முடியும்.
பெரிய மருத்துவரின் ஆவிக்குரிய குணப்படுத்துதலை, பாவமாகிய ஆவிக்குரிய நோயால் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளதை ஒப்புக்கொள்கிறவர்களால் மட்டுமே பெற முடியும். ஞாயிறன்று நாம் தேவனைப் புகழ்ந்து, வாரத்தின் மற்ற நாட்களில் நமது தேவைகளை மறுக்கின்றோம். நீங்கள் எவ்வளவு கற்றுக்கொண்டாலும், எவ்வளவு முதிர்ச்சியடைந்தாலும், உங்களது கிருபைக்கான தேவையை ஒருபோதும் மறுக்க மாட்டீர்கள் என்று இன்று அந்த உண்மையை ஒப்புக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் மற்ற பக்கத்தினை அடையும் வரை உங்கள் போராட்டத்திற்கு முடிவு இல்லை,( பிலிப்பியர் 3: 12-16 ஐ பார்க்கவும்). தேவன் மிகவும் சுதந்திரமாக ஒவ்வொரு நாளும் நமக்கு கொடுக்கிற கிருபையை கொண்டாட தொடங்க வழி நாம் அது நம் வாழ்வுக்கு எவ்வளவு வேண்டும் என்பதை ஒப்புக்கொள்ளுதலால் மூலம் மட்டுமே.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More