பால் டிரிப்பின் தினசரி நன்றி அறிக்கையின் தியானம்மாதிரி
பொறாமையானது சுய கவனம் மற்றும் சுய நீதியை மையப்படுத்தும். இது நமது உலகின் மையத்தில் நம்மை பெரியவனாக பார்க்க தூண்டும். இது நம்மைப் பற்றியது. நமக்கு தகுந்ததல்லாததை பெற நாம் தகுதியுடையவர் என்று அது நமக்கு கூறும். பொறாமை எப்போதுமே எதிர்பார்ப்பையும் மற்றும் வேண்டுதலையும் தூண்டும். உங்களிடம் இல்லாத குணாதிசயங்களை உடையவராக பொறாமை உங்களை வஞ்சிக்கிறது, உங்களுடயதல்லாததற்கும் உங்களுக்கு உரிமை உண்டு என்றும் வஞ்சிக்கும். பொறாமை மற்றொருவரின் ஆசீர்வாதத்தை கொண்டாட முடியாத மனநிலையை ஏற்படுத்தும், ஏனென்றால் நீங்கள் அதிக தகுதியுள்ளவர் என்று அது சொல்லும். எப்படி எண்ணெயானது தண்ணீருடன் ஒன்றினையாதோ அப்படியே பொறாமையும் என்றுமே கிருபையுடன் ஒன்றினையாது. பொறாமையானது நீங்கள் யார் என்பதை மறக்கச்செய்வதுமட்டுமல்லாமல் தேவன் யார் என்பதையும் மறக்கச்செய்கிறது, மேலும் வாழ்க்கையைப் பற்றி நம்மை குழப்பமடைய செய்யும்.
ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், நம் அனைவருமே, ஏதோவொரு விதத்தில், சில சமயங்களில் பொறாமையுடன் போராடுகிறோம் என்பதே உண்மை. நமக்கு அடுத்த நபரானவர் நாம் அனுபவிக்காத நல்ல நிதி நிலைமையை அடைந்து வெற்றியை பெற்றுவிட்டனர் என்றோ அல்லது நம்முடைய திருமணம் வாழ்கை தேவாலயத்தில் இருந்த மற்ற நண்பர்களின் திருமண வாழ்க்கைப் போலவே மகிழ்ச்சியாக இருக்கவோ அல்லது மற்றவர்க்கு ஒரு நிறைவான தொழில் இருப்பது போல, நம்மிடம் இருக்கும் வேலையில் அந்த நிறைவு இல்லையேன்றோ அல்லது ஒரு அன்பான சமூகமாகத் தோன்றும் மற்ற நபரின் சிறிய குழுவைப் பற்றியோ அல்லது மற்றவர் சாப்பிடுவதைப் போல நாம் சாப்பிட்டடும் அவர் போல் மெலிவாக இல்லை என்றோ இவ்வாறாக எல்லாவற்றிற்கும் பொறாமை. உயரமானவர் அவர் அவ்வளவு உயரமாக இருக்க விரும்பவில்லை, குள்ளமாணவர் ஒரு மாற்றத்திற்காக மக்களைக் குறைத்துப் பார்க்க விரும்புகிறான். சுருள்-முடி உடையவர் நேராக முடியை திருத்த விரும்புகிறார், நேராக முடியை உடையவர் சுருட்டை முடியைப் பார்த்து பொறாமை கொள்கிறார். மேதாவி படிக்காதவர் மீது பொறாமைப்படுகிறார், மேலும் அவர் சிறந்த தரங்களைப் பெற முடிந்ததைக் கண்டு படிக்காதவர் பொறாமைகள் கொள்கிறார்.
பாவம் என்பதால் பொறாமை உலகளாவியது. பாவத்தின் சுயநலத்தில் பொறாமை அதன் வேர்களைக் கொண்டுள்ளது ( 2 கொரி. 5: 14-15 ஐப் பார்க்கவும்). பொறாமையானது சுய கவனம்; இது சுய கவனம் செலுத்துவதால், அதற்கு உரிமை உண்டு; அதற்கு உரிமை இருப்பதால், அது கோருகிறது; அது கோருவதால், தேவன் நமக்குக் கொடுக்கும் நன்மையை நடு நின்று தீர்மானிக்கிறது. இந்த அடிப்படையில் தேவனை நியாயந்தீர்ப்பதால், அவருடைய நன்மையை கேள்விக்குள்ளாக்க இது நம்மை வழிநடத்துகிறது. தேவனின் நன்மையை நாம் கேள்விக்குள்ளாக்குவதால், நாம் அவரிடம் உதவிக்கு ஓட ஒட்டாமல் செய்கிறது. பொறாமை ஒரு ஆன்மீக பேரழிவு.
நாம் எதற்கும் தகுதியற்றவர் இல்லை என்பதை கிருபையானது நமக்கு நினைவூட்டுகிறது, அது அங்கேயே நின்று விடாமல் தேவன் தமது மகிமைமிக்க அன்பால், கிருபையுள்ளவராய், கனிவானவராய், நாம் சம்பாதிக்க முடியாத விஷயங்களை அவர் நமக்கு தருகிறார் என்ற உண்மையை நமக்கு உணர்த்தி பொறாமையை எதிர்கொள்கிறது. தேவன் ஞானமுள்ளவர் என்றும் அவர் ஒருபோதும் தவறான முகவரியைப் பெறுவதில்லை என்றும் கிருபை நமக்கு நினைவூட்டுகிறது - நமக்குத் தேவையானது என்று தெரிந்ததை அவர் சரியாக நமக்குக் கொடுக்கிறார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நன்றி சொல்லும் சமயம் என்பது தேவன் உங்களுக்கு அருளிய எல்லா நல்ல விஷயங்களையும் நினைவில் கொண்டு அதற்காக நன்றியுணர்வோடு இருக்கும் நேரம். ஆனால் சில சமயங்களில் காலச்சுழல்கள் உங்களுக்கான தேவனின் பல பரிசுகளுக்கு நன்றி செலுத்துவதற்கு நேரம் ஒதுக்குவதைத் தடுக்கிறது. பால் டேவிட் டிரிப்பின் இந்த குறுகிய படிக்க 5 நிமிடங்கள் மட்டுமே ஆகும் தியானங்கள் உங்களை நாள் முழுவதும் தேவனின் கருணையைப் பற்றி தியானிக்க ஊக்குவிக்கும்.
More