கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 1 நாள்

இந்த சாகச பயணத்திற்கு ஒரு முன்னுரை

அட்வென்ட் என்றால் என்ன? "அட்வென்ட்" என்பது லத்தீன் வார்த்தையான "அட்வெண்டஸ்" என்பதிலிருந்து வந்தது, அதாவது வருகை அல்லது வருதல் எனப் பொருள்படும். எபிரேயர்கள், ஒரு இரட்சகர் அல்லது மேசியாவின் வருகையை எதிர்பார்த்தனர் - அது முதல் வருகை. இப்போது, ​​அவருடைய மணமகளாக, நம் காலடியில் தவழும் அங்கிகளைக் களைந்தெறிய, அவர் திரும்பிவருவதற்காக நாம் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் - அது இரண்டாம் வருகை. அவர் முதன்முறையாக விண்ணகம் ஏறிய தருணத்திலிருந்து, அவர் திரும்பி வருவார் என்று திருச்சபை ஆவலுடன் காத்திருக்கிறது.

இந்த வருகையின் கொண்டாட்டத்தில், நான் எதற்காகப் பங்கேற்க வேண்டும்? இயேசுவின் பிறப்பைக் கொண்டாடுவதற்கும், அட்வென்ட்டுக்கும் என்ன சம்பந்தம்? பாரம்பரியமாக, அட்வென்ட் காலம், டிசம்பர்1ம் தேதி முதல் கிறிஸ்மஸ் வரை உள்ள நான்கு வாரங்களைக் கணக்கிடப் படுகிறது. ஆனால் நமது அனுதின வாழ்வில், "அட்வென்ட்" என்பது, ஒவ்வொரு நாளும் அவருடைய வருகையை எதிர்நோக்குவதை நினைவூட்டுகிறது. இந்த நேரம், இயேசு கிறிஸ்தை நம் வாழ்வின் மையமாக ஏற்றுக் கொள்வதைப் பற்றியது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தமது வீட்டிற்கு நம்மை எப்போது அழைத்துச் செல்ல வந்தாலும், அதற்கு நாம் தயாராக இருக்க விரும்புகிறோம். இந்த தியானம் உங்களுக்கு உத்வேகம், சவால், மறு கவனம், உடைப்பு, ஊக்கம், ஒன்றுபடுதல், புத்தெழுச்சி, அத்தனையும் அளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நான் இந்த வாசிப்புத் திட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவது? இது ஒவ்வொரு நாளும் தினசரி மனதை ஆழ்ந்து ஆராய்ந்து பார்க்கும் கேள்விகளை வழங்குகிறது. நீங்கள் அந்த நாளில், இயேசுவை மையமாக வைத்துச் செயல்படும் விதத்தில் உதவும்படியாக, ஒரு பரிந்துரைக்கப்பட்ட செயல் முறை அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொரு தினமாகத் தியானிக்கலாம் அல்லது சிலவற்றைத் தவிர்த்துவிட்டு, மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நீங்கள் நினைக்கும் ஒரு நாளைத் தேர்ந்தெடுத்துத் தியானிக்கலாம். நீங்கள் ஒரு தனிநபராக இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தலாம், ஆனால் குழுக்களாகவோ அல்லது குடும்பமாகவோ இதைத் தியானம் செய்வதற்கான வழிகளைப் பற்றிச் சிந்தியுங்கள். சில நடவடிக்கைகள் ஏற்கனவே கிறிஸ்மஸ் காலத்தில் நீங்கள் செய்யக்கூடிய விஷயங்களாக இருக்கும், ஆனால் கூடுதலாகக் கிறிஸ்தை மையமாகக் கொண்ட வாழ்க்கை வாழ்வது குறித்துச் சிந்திக்கத் தூண்டும். பல செயல்பாடுகள் நீங்கள் இதுவரை செய்யாத விஷயங்களாக இருக்கும், எனவே திறந்த மனதுடன் புதியதை முயற்சி செய்து பார்க்கத் தயாராக இருங்கள். ஒவ்வொரு நாளும் அறிதல், ஆய்வு செய்தல், அறிவித்தல் மற்றும் அனுபவித்தல் ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொரு நாளும் வேத வசனத்திற்கு முன்பாக, நீங்கள் வாசிக்க விரும்பும் கூடுதல் உள்ளடக்கத்தைக் காணலாம். அது உங்கள் தேடுதலுக்கு நேராக உங்களை வழி நடத்தும்.

அறிதல்: இயேசுவின் வருகைக்காகத் தினமும் ஆலயத்தில் காத்திருந்த, அந்த இரண்டு பேரின் வார்த்தைகளைப் படியுங்கள். பாரம்பரிய வழிமுறைகளை நினைவுகூரும் விதமாக, அட்வென்ட் அமைப்புகளைப் பற்றிய தகவலைப் பார்த்து, இந்த தியான நேரத்தில் பயன்படுத்த உதவியாக, உங்கள் வீட்டில் அது போன்ற ஒன்றை அமைக்கவும். அது ஒரு வட்டத்தில் நான்கு மெழுகுவர்த்திகளை அமைப்பது போல் எளிமையாக இருக்கலாம்.

ஆய்வு செய்தல்: கர்த்தரால் அருளப்பட்ட தங்களது இரட்சகரை, தங்கள் கண்களால் பார்த்து ஆசீர்வதிக்கப்பட்ட அந்த இரு நபர்களைப் பற்றி விவாதிக்கவும் அல்லது பதிவு செய்யவும். இது போன்றதொரு எதிர்பார்ப்பை உங்கள் வாழ்க்கையில் எப்படிப் பிரதிபலிப்பீர்கள்?

அறிக்கை செய்தல்: நீங்கள் கிறிஸ்மஸை எவ்விதம் எதிர்பார்க்கிறீர்கள் என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள். இந்த உற்சாக உணர்வு கொண்டாட்டம் கிறிஸ்தை மையமாகக் கொண்டு எந்தளவு இருக்கிறது?

அனுபவித்தல்: இந்த 25 நாள் பயணத்தில் திளைப்பதற்கு முன்னர், சற்று நேரம் பிரார்த்தனையில் செலவிடுங்கள். உங்கள் கண்களைத் திறக்கும்படி கர்த்தரிடம் கேளுங்கள். அதனால், இயேசுவைப் பற்றிய உங்கள் பார்வை இதுவரை இருந்ததை விடத் தெளிவாகிறது. இயேசுவின் வருகையை எதிர்பார்த்து உங்கள் வாழ்க்கையை வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி மேலும் அறியும்படி கர்த்தரிடம் கேளுங்கள். உங்கள் தனிப்பட்ட வாழ்வில் கூட, இயேசு கிறிஸ்து திரும்ப வரும்போது, ​​வாழ்க்கை உண்மையிலேயே ஒரு சாகசமாகும். இந்த கிறிஸ்மஸ் பருவத்தில் அதை முழுமையாக அனுபவிப்போம்!

வேதவசனங்கள்

நாள் 2

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்