கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 8 நாள்

இந்தச் சிறியவரில் ஒருவருக்கு.

அறிதல்: இறுதித் தீர்ப்பைப் பற்றிய இயேசுவின் போதனைகளைப் படியுங்கள். "இந்தச் சிறியவரில் ஒருவர்" எனும் இந்த வகைக்குள் வரும், உங்களுக்குத் தெரிந்த ஒருவரைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். சிலசமயம், உங்கள் சாதாரண நட்பு வட்டத்திற்கு வெளியே இவர்களை, நீங்கள் தேட வேண்டியிருக்கும். உங்களுடன் உணவு உண்பதற்கு இவர்களை அழைக்கவும். அவர்களது கதையை அறிக. அவர்களுக்காக ஜெபியுங்கள்.

ஆய்வு செய்தல்: நீங்கள் அவர்களின் முகத்தில் உண்மையாகவே இயேசுவைக் கண்டால், எப்படி வித்தியாசமாக நடத்துவீர்கள்? மந்தை புத்தி வகைக்குள் வரும் வாழ்க்கைமுறையிலிருந்து விடுபட, நீங்கள் செய்யக்கூடிய சில வாழ்வியல் மாற்றங்கள் என்ன?

அறிவித்தல்: ஒவ்வொரு நாளும் நீங்கள் பார்க்கும் இடத்தில் அந்த நபரின் பெயருடன், ஒரு குறிப்பையும் இணைத்து ஒட்டி வைக்கவும். அவர்களுக்காகத் தவறாமல் ஜெபிக்க ஆரம்பியுங்கள். அவர்களுக்கு மேலும் உதவி செய்யும்படி கர்த்தர் உங்களை எப்படி வழிநடத்துவார் என அறிந்து கொள்ளத் திறந்த மனதுடன் காத்திருங்கள்.

அனுபவித்தல்: இந்த புதிய அனுபவத்திலிருந்து, நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்? கஷ்டப்படுபவர்களுடன் நேரத்தைச் செலவிடுவதில் நீங்கள் ஆர்வமாக இருந்தால் உங்கள் வாழ்க்கை எப்படி வித்தியாசமாக இருக்கும்?

வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்