கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 7 நாள்

அலங்கரித்தல்.

அறிதல்: பரிசுத்த கூடாரத்தினை அலங்காரம் செய்வதற்கு, கர்த்தர் வகுத்த விரிவான வழிமுறைகளைக் குறித்து வாசித்துப் பாருங்கள். நீங்கள் உங்களது வீட்டில் வைத்திருக்கும் அலங்காரப் பொருட்களை ஆராய்ந்து பாருங்கள். ஒருவேளை, இதுவரை நீங்கள் அலங்கரிக்கவில்லை என்றால், இந்த முக்கியமான பண்டிகையைக் கொண்டாட இப்போதே துவங்குங்கள்.

ஆய்வு செய்தல்: இப்படித்தான் ஆலயத்தை அலங்கரிக்கும் வேண்டும் எனக் கர்த்தர் ஏன் குறிப்பிட்டார் என்ச் சிந்தித்துப் பாருங்கள்? இந்த அலங்காரங்களுக்கு என்ன முக்கியத்துவம்? அல்லது இவற்றிற்கு என்ன அடையாளங்கள் இருந்திருக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள்?

அறிவித்தல்: உங்களிடம் இருக்கும் அலங்காரப் பொருட்களின் முக்கியத்துவத்தைப் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் அல்லது சொந்த பதிவுடன் கலந்துரையாடுங்கள். கிறிஸ்து மீது நீங்கள் வைத்துள்ள கூர்ந்த நோக்கத்தை, உங்கள் அலங்காரங்கள் எவ்வாறு வெளிப்படுத்துகின்றன?

அனுபவித்தல்: இயேசுவுடனான உங்கள் உறவைப் பற்றி நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் புதிய ஆபரணம் அல்லது அலங்காரத்தை இந்த ஆண்டு உருவாக்கவும்.

வேதவசனங்கள்

நாள் 6நாள் 8

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்