கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 12 நாள்

உண்மை காதல்.

அறிதல்: உங்கள் முதல் காதலிலிருந்து விடுபடுவதற்கான எதிரான எச்சரிக்கையைப் படியுங்கள். "The twelve days of Christmas" பாடல் வரிகளைப் பாருங்கள். உங்களுடன் இணைந்து பாடுவதற்குக் குறைந்தபட்சம் ஒரு நண்பரைக் கண்டறியவும்.

ஆய்வு செய்தல்: உங்கள் முதல் காதல் எது? காலப்போக்கில் உங்கள் காதல் உணர்வுகள் எவ்வாறு மாறுபடுகின்றன என்பதை ஆழமாகச் சிந்தியுங்கள். இதை எபேசிய சபையுடன் நீங்கள் எவ்விதம் தொடர்புப் படுத்திப் புரிந்து கொள்ளலாம்?

அறிவித்தல்: நீங்கள் இயேசுவுக்கு எதைக் கொடுக்க விரும்புகிறீர்கள் என்பதன் வெளிப்பாடாக உங்கள் சொந்தப் பாடல் வரிகளை எழுதுங்கள் — இது உங்கள் உண்மையான முதல் காதல் பாடல். உங்கள் பாடல் வரிகளில், அவர் விரும்புபவற்றைக் கோர்த்து... உங்கள் வாழ்க்கையில் அவர் விரும்பிய விதத்தில் நீங்கள் செய்த மாற்றங்கள், அவர் விரும்பிய படி நீங்கள் செய்த காரியங்கள், போன்ற விஷயங்களைச் சேர்க்கவும்.

அனுபவித்தல்: 1 யோவான் புத்தகத்திலிருந்து, அவர் நம்மீது வைத்திருக்கும் மிகுந்த அன்பைப் பற்றிய பகுதியை வாசியுங்கள். எங்கள் உண்மையான அன்பு, உங்களுக்கு ஏற்கனவே எப்படிப்பட்ட பரிசுகளை வழங்கியுள்ளது?

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்