கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
முன்னணை காட்சிகள்.
அறிதல்: இயேசுவைத் தொழுது கொள்ள வந்த சாஸ்திரிகளைப் பற்றிய பகுதியை வாசியுங்கள். அந்த முன்னணை காட்சியில் இடம்பெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு, கிறிஸ்தை மையமாகக் கொண்டது என்பதைக் காண்பிக்க, நூலின் ஆசிரியர் பயன்படுத்திய அம்சங்களைக் கவனியுங்கள்.
ஆய்வு செய்தல்: அந்தக் காட்சியில் நீங்கள் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அந்தக் காட்சியில் நீங்கள் என்ன நிலைப்பாடு அல்லது எந்த கதாபாத்திரத்தை ஏற்க விரும்புவீர்கள்?
அறிவித்தல்: ஞானிகள் இயேசுவை மண்டியிட்டு சாஷ்டாங்கமாய் வணங்கினர். இப்போதே நீங்களும் மண்டியிட்டு, அவரை எவ்வளவாக நேசிக்கிறீர்கள் என்பதை அவருக்கு வெளிப்படுத்துங்கள். அந்த தொழுகை நிலையில் இருப்பது, உங்கள் மன நிலையை எவ்வாறு மாற்றுகிறது?
அனுபவித்தல்: ஞானிகள் தங்களது மிகச் சிறந்த பரிசுகளையும் வழங்கி வழிபட்டனர். வெறும் பாடல்கள் மட்டுமே உடைய ஆராதனை அல்ல; இதுபோன்றதொரு வழிபாட்டு முறையை இன்று திருச்சபை ஆராதனையில் வழங்குவதற்கான ஆக்கப்பூர்வமான வழிமுறையைப் பற்றிச் சிந்தியுங்கள்.
Key: நாள்_16
நாள்_16.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்