கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 21 நாள்

இதுவரை சொல்லப்பட்டதில் இதுவே மிகப் பெரும் காவியம்.

அறிதல்: கிறிஸ்மஸ் நெருங்கி வருகிறது! பண்டிகை காலம் பரபரப்பாக இருப்பதால் அவர் மீதான கவனத்தை இழப்பது எளிதாக இருக்கும். யோவான் நற்செய்தி நூலின் கடைசி வசனத்தை வாசித்துப் பாருங்கள். சில நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் இணைந்து,, 1965ஆம் ஆண்டு வெளியான, "The Greatest Story Ever Told" எனும் திரைப்படத்தைப் பாருங்கள். இது DVD அல்லது இணையத்தில் கிடைக்கும்.

ஆய்வு செய்தல்: இயேசுவின் வாழ்க்கை சரிதையில், உங்களைக் கவர்ந்த பகுதி எது?

அறிவித்தல்: இந்தத் திரைப்படம், இயேசுவின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள உங்களுக்கு எப்படி உதவியது? இத் திரைப்படத்தை மற்றவர்களுடன் இணைந்து பார்ப்பதால், அது எப்படி ஒரு நல்ல விவாதத்திற்கான வாய்ப்புகளைத் திறக்கிறது?

அனுபவித்தல்: உங்கள் வாழ்க்கை கதை எப்படி மிகச் சிறந்த கதையின் ஒரு பகுதியாக மாறியது? கர்த்தரின் மிகப் பெரிய கதையில் நீங்கள் ஆற்றிய பங்கு பற்றிய பதிவை எழுதவும்.

வேதவசனங்கள்

நாள் 20நாள் 22

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்