கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 20 நாள்

வார்த்தை.

அறிதல்: அப்போஸ்தலன் யோவான் எழுதிய நற்செய்தி நூல் முதலாம் அதிகாரத்தில், இயேசுவின் வாழ்க்கையைக் குறித்து எழுதப்பட்ட பகுதியை வாசித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு அட்வென்ட் மாலையை உருவாக்கினால், அந்த மெழுகுவர்த்தி வெளிச்சத்தின் பிரதிபலிப்பை உற்று நோக்குவதில் சிறிது நேரம் செலவிடுங்கள்.

ஆய்வு செய்தல்: இந்த அத்தியாயம் ஏறக்குறைய ஒரு தத்துவார்த்தமான முறைமையில் எழுதப்பட்டதாக அறியப்படுகிறது, ஆனால், அதில் தனது வார்த்தையின் வருகைக்காக உலகத்தைக் கர்த்தர் எவ்வாறு ஆயத்தம் செய்தார் என்பதை விவரிக்கிறது. இந்த அதிகாரத்தில் உங்களைக் கவர்ந்த பகுதி எது?

அறிவித்தல்: இயேசுவே வார்த்தை என்பதையும், அவர் துவக்கம் முதலே கர்த்தர் என்பதையும் புரிந்துகொள்வதில் உள்ள முக்கியத்துவம் என்ன?

அனுபவித்தல்: "என்னைப் பின்பற்றி வந்து பாருங்கள்" என்பது யோவான் முதலாம் அதிகாரத்தில் நீங்கள் வாசிக்கும் ஒரு வசனம். இயேசு தம்மைப் பின் தொடரும்படி உங்களிடம் கேட்டபோது, அப்போது உங்களுக்கு எப்படி இருந்தது?

வேதவசனங்கள்

நாள் 19நாள் 21

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்