கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 22 நாள்

மகிழ்ச்சி.

அறிதல்: சங்கீதப் புத்தகத்திலிருந்து இந்தப் பகுதியை வாசியுங்கள். ஒரு குழுவைச் சேர்த்து, கிறிஸ்மஸ் பாடல் பவனி செல்லுங்கள். உங்களுக்குப் பாடலின் வரிகள் முழுமையாகத் தெரியாவிட்டால், நீங்கள் பாடல் பவனி செல்வதற்கு முன் அதன் வரிகளை அச்சிடவும். நீங்கள் வசிக்கும் பகுதிகளைச் சுற்றி வசிக்கும் மக்களைச் சந்திக்கலாம் அல்லது இந்த மாதம் நீங்கள் சேவை செய்த நபர்களில் ஒருவரை மீண்டும் சந்திக்கலாம்.

ஆய்வு செய்தல்: உங்கள் பாடலுக்கு மக்கள் அளித்த வரவேற்பு எப்படி இருந்தது? உங்களுக்குப் பிடித்த கிறிஸ்மஸ் பவனி பாடல் எது? உங்களுக்கு இந்த பாடல் பிடித்தமாக இருப்பதற்கு என்ன காரணம்?

அறிவித்தல்: உங்களுக்குப் பிடித்த கிறிஸ்மஸ் பவனி பாடல் வரிகளை உங்கள் சொந்த கையெழுத்தில் எழுதி, அதை நகலெடுக்கவும். இந்த ஆண்டு பாடல் பவனி வழியாக, ஒரு புதிய வழியில் தொடர்பு கொள்ளும் மகிழ்ச்சியையும், அமைதியையும் அனுபவத்தையும் அளிக்கும்படியாக கர்த்தர் உங்களைப் பயன்படுத்தக் கேளுங்கள்.

அனுபவம்: கிறிஸ்மஸ் பாடல் பவனியில் உங்களுக்குப் பிடித்த நினைவு என்ன?

வேதவசனங்கள்

நாள் 21நாள் 23

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்