கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 17 நாள்

ஒரு குடும்பத்தைத் தத்தெடுக்கவும்.

அறிதல்: இயேசு கிறிஸ்தின் மூலம் நாம் எவ்வாறு கர்த்தரின் குழந்தைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டோம் என்பதைப் பற்றிய வேத பகுதியை வாசியுங்கள். கிறிஸ்மஸ் சமயத்தில் உதவும் விதமாக, ஒரு குடும்பத்தைத் தத்தெடுப்பது பலரின் வழக்கம். இந்த கிறிஸ்மஸில் அவ்விதமாகத் தேவையில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கண்டுபிடித்து அவர்களுக்கு ஆதரவானதொரு குடும்பமாக இருக்கத் திட்டமிடுங்கள்.

ஆய்வு செய்தல்: கிறிஸ்மஸ் உதவியாக, ஒரு குடும்பத்தைத் தத்தெடுப்பதற்கும், உங்கள் குடும்பத்திற்காக ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதற்கும் என்ன வித்தியாசம்? நம்மை நேசித்து, தமது குழந்தையாகத் தத்தெடுத்து ஏற்றுக்கொண்ட கர்த்தரின் அர்ப்பணிப்பைப் பற்றி இந்த வார்த்தை என்ன சொல்கிறது?

அறிவித்தல்: அரச குடும்பத்தின் குழந்தைகளுக்கு என்ன உரிமைகள் மற்றும் சலுகைகள் உள்ளன? நீங்கள் கர்த்தரின் குழந்தையாக இருந்தாலும், அதற்கு ஏற்ற விதமாக வாழாத சில வழிகள் யாவை?

அனுபவித்தல்: தத்தெடுக்கப்பட்ட ஒருவரைக் கண்டுபிடித்து, அவர்களது வாழ்க்கையில் அதற்கு என்ன அர்த்தம் என்பதைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அவரது அனுபவங்கள் வழியாக, கர்த்தரின் குழந்தையாக வாழ்வது எத்தகையது என உங்களுக்கு வெளிப்பட்டதைப் பதிவு செய்யுங்கள். அதே வழியில் மற்றவர்களை நேசிக்கவும்.

வேதவசனங்கள்

நாள் 16நாள் 18

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்