கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
கிறிஸ்மஸ் வாழ்த்து அட்டைகள்.
அறிதல்: ஊக்கமளிக்கும் கடிதத்தைப் பற்றிய பகுதியை வாசியுங்கள். புதிய ஏற்பாட்டின் பெரும்பகுதி கடிதங்களால் ஆனது. இந்த ஆண்டு உங்களுக்கு உண்மையிலேயே ஆசீர்வாதமாக இருந்த ஒருவருக்காகக் கிறிஸ்துமஸ் அட்டையை வாங்கவும் அல்லது உருவாக்கவும். அவர்கள் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானவர் என்பதை அவர்களுக்கு வெளிப்படுத்தக் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள். நீங்கள் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்வதற்கு, ஒரு வாழ்த்து அட்டை போதவில்லை என்றால், ஆதித் திருச்சபை செய்தது போல் ஒரு முழு கடிதத்தையும் எழுதுங்கள்.
ஆய்வு செய்தல்: முதல் நூற்றாண்டில், இவை போன்ற கடிதங்கள் எவ்வளவு பொருள் நிறைந்ததாக இருந்திருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் தொடர்பு உள்ளவர்களுக்கு, இதுபோன்ற உங்களது எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு, நீங்கள் எந்த வகையான தகவல்தொடர்புகளை அதிகமாகப் பயன்படுத்துகிறீர்கள்?
அறிவித்தல்: உங்கள் வாழ்த்து அட்டை, அந்த நபரை எப்படி உணர வைக்கும் என்று நினைக்கிறீர்கள்? ஒருவரிடம் அன்பை வெளிப்படுத்துவதில் இவ்வளவு சக்தி இருப்பதாக நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
அனுபவித்தல்: இயேசு நம்மீது தம்முடைய அன்பை வெளிப்படுத்தும் விதமாக, திருமறை என்ற மிக நீண்டதொரு கடிதத்தை நமக்கு எழுதினார். அவர் உங்களுக்கு எழுதிய கடிதத்தில், நீங்கள் மிகவும் அர்த்தமுள்ள பகுதியாகக் கருதுவது எது?
Key: day_14
day_14

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்