கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 5 நாள்

விளக்குகள்.

அறிதல்: இயேசு ஒளியாக இருக்கிறார், என்பதைக் குறித்த வேத பகுதிகளை வாசியுங்கள். கிறிஸ்மஸ் விளக்குகளின் பாரம்பரியத் தொடக்கம், எங்கிருந்து துவங்கியது என ஆராய்ந்து பாருங்கள். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் நகரத்தைச் சுற்றிப் பார்வையிட்டு, விளக்குகளின் வெவ்வேறு வகையான உணர்வு வெளிப்பாடுகளைக் கண்டு உணருங்கள்.

ஆய்வு செய்தல்: இந்த உலகத்திற்கு இயேசு எப்படி ஒளியாக இருக்கிறார்? ஒளியைப் பற்றி, உங்களுக்குத் தெரிந்த அறிவியல் உண்மைகளைப் பற்றிச் சிந்தியுங்கள். கர்த்தர் படைப்பின் துவக்கத்தில் படைத்த ஒளியானது, இயேசு யார் என்பதை இந்த உலகிற்குப் பிரகாச வெளிச்சமாகக் காண்பிக்க, எப்படி ஒரு சரியான உதாரணமாக இருக்கிறது?

அறிவித்தல்: இயேசு தம்மைப் பின்பற்றுபவர்களை உலகத்தின் ஒளி என்று குறிப்பிட்டது ஏன் என்று சிந்தித்துப் பாருங்கள்? உங்கள் உறவுகள் மற்றும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில், அது ஓர் வெளிச்சமாக இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அர்த்தம்?

அனுபவித்தல்: உங்களைச் சுற்றி வாழ்பவர்களுக்கு, நீங்கள் எப்படி வெளிச்சமாக இருக்க முடியும்? இந்த கிறிஸ்மஸ் காலத்தில் ஒளியாகப் பிரகாசிக்க ஆயத்தமாகவும்.
நாள் 4நாள் 6

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்