கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 4 நாள்

எல்லாருக்கும் பணிபுரிபவர்.

அறிதல்: ஒரு வேலைக்காரனாக, சேவை செய்வதைக் குறித்து, இயேசு தமது சீடர்களிடம் கூறிய கருத்துக்களை, வாசித்துப் பாருங்கள். அடுத்த 24 மணிநேரத்தில், யாரவது ஒருவருக்குச் சேவை செய்வதன் வழியாக, இதைச் செயல்படுத்திக் காட்டுங்கள். விசேஷமாக, ஒரு சிறு குழந்தையை இயேசுவின் பெயரில் வரவேற்கும் விதத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.

ஆய்வு செய்தல்: இந்தக் கருத்தை விளக்க, இயேசு ஏன் ஒரு குழந்தையை தம் கைகளில் எடுத்துக்கொண்டார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்? அங்கிருந்த அந்தச் சிறு குழந்தை, இயேசுவின் ஊழியத்தைப் பற்றி என்ன கூறுகிறது?

அறிவித்தல்: யார் அதிகமாக ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று நினைக்கிறீர்கள்? சேவை செய்யும் நீங்களா? அல்லது சேவையைப் பெற்றிடும் மக்களா?

அனுபவித்தல்: உங்கள் பெரும்பாலான நாட்களை எப்படிச் செலவிடுகிறீர்கள் என்பதைக் குறித்த ஒரு கணக்கை எழுதிப் பாருங்கள். சேவையைப் பெறுகிறவராக இருக்கிறீர்களா? அல்லது சேவை செய்பவராக உங்களது வாழ்க்கை சிறப்பிக்கப்படுகிறதா? கிறிஸ்மஸ் நேரத்தில் இது வேறுபடுகிறதா?

வேதவசனங்கள்

நாள் 3நாள் 5

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்