கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 2 நாள்

அறிவிப்பு.

அறிதல்: புதிய ஏற்பாட்டு நூலின் முதல் அத்தியாயத்தை வாசியுங்கள் - கர்த்தர் தமது மகனுக்காகத் தேர்ந்தெடுத்த இந்த உலகத்துக்குரிய தந்தையான யோசேப்புக் குறித்த விபரங்கள்.

ஆய்வு செய்தல்: தலைமுறை தலைமுறையாக இருந்த எதிர்பார்ப்புகளின் தாக்கத்தினால், அத்தகைய அற்புதமான கதாபாத்திரத்தை ஏற்றுக்கொள்ள யோசேப்பு தயங்கித் திகைப்பதைக் கவனியுங்கள். இயேசுவைக் குறித்து தேவதூதன் அவர்களிடம் சொன்னபோது, யோசேப்பின் மனதில் என்ன இருந்தது என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

அறிவித்தல்: யோசேப்பின் நிலையில் நீங்கள் இருந்திருந்தால் எப்படி உணர்ந்திருப்பீர்கள்? யோசேப்பு மற்றும் நம் அனைவருக்கும் இந்த அறிவிப்பு என்ன அர்த்தம் என்பதைப் பற்றி ஒரு நண்பர் அல்லது உங்கள் சொந்த பதிவுடன் கலந்துரையாடுங்கள்.

அனுபவித்தல்: கேலிக்குரியதாகத் தோன்றிய ஒன்றைச் செய்யும்படி கர்த்தர் உங்களிடம் கேட்ட அனுபவம் உங்களுக்கு உண்டா? இந்த கிறிஸ்மஸ் காலத்தில் கர்த்தர் நீங்கள் செய்ய விரும்புகிறார் என்று உங்களுக்குத் தோன்றும் ஒரு அபத்தமான ஒரு திட்டத்தை உருவாக்குங்கள்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்