ஆத்தும பரிசுத்தம்மாதிரி
பயத்திலும் விசுவாசம் உண்டு, ஆனால் அது நமது விசுவாசத்தை தவறான விஷயங்களில் வைக்கதூண்டும். பயமானது நமது விசுவாசத்தை "இப்படி நடந்துவிட்டால்" என்னும் ஒரு மாயையான சம்பவங்களின் மீது வைக்கிறது. நம்முடைய அச்சங்கள் அதிகம் ஏற்படக் கூடிய அல்லது ஏற்படாத விஷயங்களில் கவனம் செலுத்துகின்றன. நடக்கக்காத மற்றும் நடக்கபோகாத விஷயங்களுக்கு அஞ்சி எந்த பிரயோஜனமும் இல்லை. வேதாகமத்தில் உள்ளவர்கள் கூட தங்களது சொந்த "இப்படி நடந்துவிட்டால்" என்னும் மாயையான சம்பவங்களுக்கு பயந்து போராடினார்கள். மோசேயின் "இப்படி நடந்துவிட்டால்" என்னும் மாயையான பயம் மற்றும் அவருடைய பயத்தை சமாளிக்க தேவன் அவருக்கு எவ்வாறு பலம் கொடுத்தார் என்பதைப் பற்றி நாம் இன்று தியானிப்போம்.
உங்கள் அச்சத்தைத் தூண்டும் சில "இப்படி நடந்துவிட்டால்" காட்சிகள் என்ன?
உங்கள் அச்சத்தைத் தூண்டும் சில "இப்படி நடந்துவிட்டால்" காட்சிகள் என்ன?
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நாம் உடலுடன் கூடிய ஆன்மா அல்ல. நாம் ஒரு ஆன்மாவுடன் கூடிய ஒரு உடல். நம் உடல்களை சுத்திகரிக்க,உலகம் சரியான முறைகளை கற்றுக்கொடுக்கையில், சில சமயங்களில் நம் ஆன்மாவையும் சுத்தீகரிக்க வேண்டும். இந்த 35 நாள் திட்டம் மூலம் உங்கள் ஆத்மாவை சீரழிக்கும் காரியங்களை அடையாளம் கண்டுகொள்ளவும்,ஆண்டவர் உங்களை எவ்வாறாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ, அதற்கு தடையாக இருக்கும் காரியங்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறது. நீங்கள் இந்த சேதத்தை ஏற்படுத்தும் தாக்கங்களை நிதானப்படுத்தவும் மற்றும் உங்கள் ஆத்துமாவுக்கு சுத்தமான வாழ்க்கை வாழவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வீர்கள்.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்களுக்கும் LifeChurch.tv க்கும் நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.lifechurch.tv க்கு செல்லவும்.